Skip to main content

காலாண்டுத் தேர்வை முழு ஆண்டுத் தேர்வு போல் நடத்த கல்வித்துறை உத்தரவு

மாணவர்களின் கல்வி அறிவை பரிசோதிக்கும் வகையில் காலாண்டு தேர்வை முழு ஆண்டுத் தேர்வு போல் நடத்த வேண்டும் என பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.


பள்ளிகளில் 10,12-வது வகுப்பு காலாண்டுத் தேர்வு நடத்துவதற்கான அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 10ஆம் வகுப்பு தேர்வு செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கி, 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல், பிளஸ்2 தேர்வு செப்டம்பர் 15இல் தொடங்கி, 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுதொடர்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் அனுப்பிய சுற்றரிக்கையில் தெரிவித்திருப்பதாவது: காலாண்டுத் தேர்வை முழு ஆண்டுத் தேர்வு போல் நடத்த வேண்டும். மேலும், ஒவ்வொரு அறைக்கும் 20 மாணவ, மாணவிகள் வீதம் தேர்வெழுத அனுமதிக்கவும், தேர்வறை ஒன்றுக்கு ஒரு கண்காணிப்பாளர் வீதம் நியமிக்க வேண்டும். குறிப்பாக எந்தப் பாடத்திற்கு தேர்வு நடத்தப்படுகிறதோ, அப்பாடம் தொடர்பான ஆசிரியர்களை அறைக் கண்காணிப்பாளர் பணியில் எக்காரணம் கொண்டும் ஈடுபடுத்தக் கூடாது.

அரசு பொதுத் தேர்வு போல் மாணவ, மாணவிகளின் கல்வி அறிவை அறிந்து கொள்ளும் வகையில் இத்தேர்வை நடத்த வேண்டும். மேலும், ஆசிரியர்கள் பாடத் தேர்வுகள் முடிந்தவுடன் விடைத்தாள்களை பொதுத்தேர்வு மதிப்பீட்டின் அடிப்படையில் திருத்தம் செய்ய வேண்டும். அதோடு, மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களை உடனடியாக மாணவ, மாணவிகளிடம் அளித்து சரிபார்க்க வேண்டும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா