Skip to main content

ஐடிஐ தகுதிக்கு இந்திய கப்பல் கழகத்தில் பயிற்சியுடன் பணி

மும்பையில் செயல்பட்டு வரும் இந்திய கப்பல் கழகத்தின் Fleet Personnel Department (Engineering)- Engine Room Petty Officers பணியிடங்களை நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பணி: Engine Room Petty Officers(Fitter)

வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.


தகுதி: கடல் பணிக்கான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.41,884



பணி: Trainee Engine Room Petty Officers (Tr.Fitter)

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பயிற்சி காலம்: 6 மாதங்கள்

சம்பளம்: பயிற்சி காலத்தின்போது மாதம் ரூ.10,000 வீதம் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

தகதி: இரு பணிகளுக்கும் தொழில்நுட்ப கல்லூரியில் மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது பிட்டர் அல்லது டீசல் அல்லது மோட்டார் மெக்கானிக் துறைகளில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கப்பல் கட்டும் நிறுவனத்தின் கீழ் பிட்டர், டீசல், மோட்டார் மெக்கானிக் துறையில் 2 வருட டிரேடு அப்ரண்டிஸ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும்

a.Welding and Gas Cutting

b.Fabrication and Proficiency in Fitting

c.Lathe, drill and other machine operation

d.Ship related maintenance work போன்ற ஏதாவதொரு பணியில் திறமையானவர்களாக இருக்க வேண்டும். 6 மாதங்கள் கப்பல் பணி அல்லது கப்பல் சார்ந்த பிரிவில் பணி செய்தவர்கள் அல்லது 6 மாதங்களுக்கு மேலாக மெக்கானிக்கல் பிட்டர் பணி அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியா பிட்டர்கள் மற்றும் டிரைனி பிட்டர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின் மருத்துவ தகுதித்தேர்வு நடத்தப்படும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 26.08.2014

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: 3rd Floor, FP Section, SCI Head Office, 245, Madame Cama Road, Nariman Point, Mumbai-400021, India.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா