Skip to main content

புதிய பிராட்பேண்ட் கொள்கைக்கான கருத்துரு

இந்தியாவில் தகவல் தொலை நுட்பத்தின் பயன்பாட்டினை வரையறை செய்திடும் ஆணையமாகச் செயல்படும் Telecom Regulatory Authority of India (TRAI) புதிய பிராட்பேண்ட் கொள்கையினை வடிவமைக்க முயற்சித்து வருகிறது. இதற்கான கருத்துரு தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக, இதன் தலைவர் ராஹுல் குல்லார் தெரிவித்துள்ளார். இந்த பிரிவில் இயங்கி வரும் தனியார் நிறுவன்ங்களின் ஒத்துழைப்புடன் இது வரையறை செய்திடப்படும் என்றும், முடிவான கொள்கை தகவல்கள் அடுத்த மாதம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய இந்திய மக்களின் தேவைக்கேற்ப, சரியான பிராட்பேண்ட் தொழில் நுட்பத்தினைக் கண்டறிந்து அனைவரும் பின்பற்ற வேண்டும். இந்த வகையில் கூடுதல் செலவும் ஏற்படக் கூடாது. செலவினைக் குறைப்பதற்கான சாத்தியக் கூறுகளும் ஆராயப்படும். 

பிராட்பேண்ட் இணைப்பு வழங்க, தற்போது பயன்படுத்தப்படும் பழைய ஸ்பெக்ட்ரம் முறைக்கான உரிம்ம் வாபஸ் செய்யப்படும். புதிய கொள்கைக்கான கருத்துரு, 4ஜி மற்றும் எல்.டி.இ. சேவைகளை வழங்கக் கூடிய 700MHz ஸ்பெக்ட்ரத்தினை வெளியிடும் வகையில் திட்டத்தினைத் தரும். பாதுகாப்புத் துறையிடம், இன்னும் சற்று கூடுதலான ஸ்பெக்டரம் அலைவரிசையினைத் தருமாறு கேட்டுக் கொள்ளப்படும். அதனை இணைய இணைப்பு வழங்கப் பயன்படுத்தப்படும். 

ட்ராய் அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, சென்ற ஏப்ரல் மாதம், பிராட்பேண்ட் பயனாளர்களின் எண்ணிக்கை மார்ச் மாதம் 6 கோடியே 87 ஆயிரத்திலிருந்து, 1.45% உயர்ந்து 6 கோடியே 17 லட்சத்து 40 ஆயிரம் ஆனது. 

இவர்களில், வயர் வழி இணைப்பு பெற்று பயன்படுத்துவோர் எண்ணிக்கை 

ஒரு கோடியே 49 லட்சத்து 10 ஆயிரம். மொபைல் போன் மற்றும் டேட்டா கார்ட் வழி இணைய இணைப்பு பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 64 லட்சத்து 70 ஆயிரமாகும்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்