Skip to main content

இடைநிலை ஆசிரியர்கள் 2,408 பேர் விரைவில் தேர்வு. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு


அரசு பள்ளிகளில் பணியமர்த்த இடைநிலை ஆசிரியர்கள் 2ஆயிரத்து 408 பேர் விரைவில் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று அறிவித்துள்ளது


.இடைநிலை ஆசிரியர்கள்தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 12 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. ஆசிரியர் தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே வெளியிட்டது. விரைவில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட இருக்கிறார்கள்.

இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் எவ்வளவு உள்ளது என்றும், அந்த இடங் களை நிரப்புவது குறித்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.நிலுவையில் (பேக்லாக்) இருக்கும் பணியிடங்கள் 845 ஆகும். அவற்றில் பெண்களுக்கு 307 இடங்கள். மேலும் ஆதிதிராவிடர்களுக்கு அதிக இடங்கள் இருக்கின்றன.நிலுவையில் உள்ள 

காலிப்பணியிடங்கள்நிலுவையில் இல்லாமல் இந்த வருட காலிப்பணியிடங்கள் 830. அவற்றில் தமிழ் வழியில் படித்த பெண்களுக்கு மட்டும் 88 இடங்கள் உள்ளன. பெண்களுக்கு 327 இடங்கள் உள்ளன.மேலும் பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் நலத்துறை சார்பில் உள்ள பள்ளிகளில் 64 இடங்களும், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 669 பணியிடங்களும் உள்ளன. மொத்தத்தில் 2 ஆயிரத்து 408 இடங்கள் உள்ளன.இந்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

விரைவில் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்