Skip to main content

ரூ.100 கோடி செலவில் அனைத்து மையங்களிலும் சத்துணவு கலவை சாதம்

ரூ.100 கோடி செலவில் அனைத்து மையங்களிலும்
சத்துணவு கலவை சாதம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு


சுதந்திர தினவிழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: பல நூற்றாண்டுகள் அந்நியர்களின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த நம் நாடு, விடுதலைப் பெற்று தற்போது உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நன்னாளில் 14வது முறையாக தேசிய கொடியை ஏற்றி வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். சுதந்திரத்தின்
பயனை அனைவரும் பெறும் வகையிலான திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.  ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பது பழமொழி.  ஏழை சொல் தான், புனித ஜார்ஜ் கோட்டையில் எதிரொலிக்கும் என்ற புதுமொழி தமிழகத்திலே நிலைநாட்டப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களுக்கு நேரடியக பயன் தரக் கூடிய பல்வேறு நலத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் 20 கிலோ அரிசி வழங்குதல், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் ரூ.35 லட்சத்து 38 ஆயிரம் பேருக்கு ரூ.1,000 மாதாந்திர ஓய்வூதியம் வழங்குதல், மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டம், கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம், ஏழைப் பெண்களுக்கு திருமண உதவியாக 4 கிராம் தாலிக்கு தங்கத்துடன் ரூ.50,000 வரை நிதியுதவி வழங்கும் திட்டம், மிக மிகக் குறைந்த விலையில் உணவளிக்கும் அம்மா உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் அடித்தட்டு மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் இந்த நிதியாண்டில் ரூ.19 ஆயிரத்து 634 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  கிராமப்புற மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதன் அடிப்படையில், கிராமப்புறங்களில் உள்ள 122 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. சுமார் ரூ.135 கோடி செலவில் புதிதாக 172 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வேளாண் துறையில் வியத்தகு வளர்ச்சியை தமிழகம் கண்டிருக்கிறது. வேலை வாய்ப்புகளையும், சுய வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்திடும் வகையில், தொழில் துறையில் பல்வேறு தொலைநோக்குத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூரும் இந்த வேளையில், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.9,000த்திலிருந்து ரூ.10,000ம் உயர்த்தி வழங்கப்படும். மேலும், அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் ரூ.4,500ல் இருந்து 5,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும். இதன் மூலம், 1,955 நபர்கள் பயனடைவர். 

விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்று அதற்காக பாடுபட்டவர்களின் வாரிசுதாரர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், முத்துராமலிங்கத் தேவர், விஜய ரகுநாத சேதுபதி ஆகியோரின் வழித்தோன்றல் மற்றும் வ.உ.சிதம்பரனார் பேரன் ஆகியோருக்கு மாதம் வழஙகப்பட்டு வந்த ரூ.2,000 சிறப்பு ஓய்வூதியம் இனி 4,500 ரூபாயாக உயர்த்தப்படும்.  
சத்துணவுத் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஒன்றியத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மற்றும் மூன்று பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் சோதனை அடிப்படையில்,  பலவகை கலவை சாதத்துடன் மசாலா சேர்த்த முட்டை வழங்கும் முன்னோடித் திட்டம் சென்ற ஆண்டு செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு பயனாளிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கும், பலவகை கலவை சாதத்துடன் மசாலா சேர்த்த முட்டை உணவு வகைகள் வழங்கும் திட்டம் நீட்டிக்கப்படும். இதற்கு ரூ.100 கோடி செலவாகும்.  இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்