அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பி.ஏ.,பி.எல். சட்டப் படிப்பில் மாணவர் சேர்க்கை புதன்கிழமையோடு (ஜூலை 23) நிறைவுபெற உள்ளது.
தமிழகத்திலுள்ள 6 அரசு சட்டக் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள ஐந்தாண்டு
ஒருங்கிணைந்த பி.ஏ.,பி.எல். சட்டப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை ஜூலை 7-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தியது.
இதில் மொத்தமுள்ள 1,052 இடங்களில் 728 இடங்கள் நிரம்பின.
மீதமுள்ள 324 இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
முதல் நாளில் 160 பேர் அழைக்கப்பட்டனர். இவர்களில் 122 பேர் இடங்களைத் தேர்வு செய்து கல்லூரி சேர்க்கைக் கடிதம் பெற்றுச் சென்றனர்.
மீதமுள்ள 102 இடங்களுக்கு புதன்கிழமை இறுதி கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.