Skip to main content

அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதம் குறைந்த தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை

கடந்த கல்வி ஆண்டில் பொதுத்தேர்வுகளில் 70 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தனியாகவும் மற்றும் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய
மேற்பார்வையாளர்கள், உதவி தொடக்ககல்வி அலுவலர்களுக்கு தனியாகவும் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
இந்த ஆய்வுக் கூட்டங்களில் பள்ளிக்கல்வி அமைச்சர் வீரமணி, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலர் சபீதா ஆகியோர் பங்கேற்கின்றனர். இது தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் வரும் 4ம் தேதி அனைத்து சிஇஓக்களின் நேர்முக உதவியாளர்களுக்கு நடத்தப்பட உள்ளது. வரும் ஆகஸ்ட் 13ம் தேதி தொடங்கி செப்டம்பர் 1ம் தேதி வரை 8 கட்டங்களாக ஆய்வுக் கூட்டம் நடைபெறும். ஒவ்வொரு இடத்தில் நடைபெறும் கூட்டங்களில் அருகே உள்ள மாவட்ட அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த கல்வி ஆண்டில் 10, பிளஸ்2 பொதுத்தேர்வுகளில் 70 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், இது தவிர நடப்பு கல்வி ஆண்டில் 6ம் வகுப்பு ஆங்கிலப்பிரிவில் சேர்க்கப்பட்ட மாணவ, மாணவிகள் எண்ணிக்கை, பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், கல்வி நலத்திட்டங்கள் வழங்கப்பட்ட விவரம், கட்டாய கல்வி சட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஏழை மாணவர்கள் சேர்க்கப்பட்ட விவரம், பள்ளிகளில் மழைநீர் சேமிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்ட விபரம் உள்ளிட்ட 18 முக்கிய அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
முதல் கட்டமாக வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கான ஆய்வு கூட்டம் வரும் 13ம் தேதி திருவள்ளூரில் நடக்கிறது. தொடர்ந்து 14ம் தேதி விழுப்புரத்திலும், 18ம் தேதி தஞ்சாவூரிலும், 19ம் தேதி புதுக்கோட்டையிலும், 20ம் தேதி திண்டுக்கல்லிலும், 21ம் தேதி கரூரிலும், 22ம் தேதி கோவையிலும் ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. கடைசி கட்டமாக நெல்லை, குமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் வரும் செப்.1ம் தேதி தூத்துக்குடியில் நடக்கிறது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்