Skip to main content

பி.எட்., எம்.எட். படிப்புகளின் காலம் 2 வருடமாக உயர்கிறது.

இந்தியா முழுவதும் கல்வித்தரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில அரசுகளும் கல்வியில் மேம்பாடு அடைய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

தற்போது பி.ஏ., பி.எஸ்.சி. படித்தவர்களுக்கு பி.எட். என்ற ஆசிரியர் பயிற்சி
அளிக்கப்பட்டு வருகிறது இது தற்போது ஒரு ஆண்டுகால படிப்பாகும். அதுபோல எம்.எட். படிப்பும் ஒரு வருட காலபடிப்பாகும். இந்தியாவில் கல்வித்தரத்தை மேம்படுத்த முதல் கட்டமாக ஆசிரியர்களுக்கு நல்ல திறமை இருக்கவேண்டும். இதையொட்டிதேசிய ஆசிரியர் கல்விக்குழு பி.எட். படிப்பையும், எம்.எட். படிப்பையும் தலா 2 வருடமாக உயர்த்த கொள்கை அளவில் முடிவு எடுத்துள்ளது.

இதுகுறித்து இந்தியா முழுவதும் இருந்து அனைத்து ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் கருத்துக்களை கடிதமாக தேசிய ஆசிரியர் கல்விக்குழுவிற்கு சமர்ப்பித்துள்ளன. தேசிய ஆசிரியர் கல்விக்குழு பரிசீலித்து முடிவை எடுக்க உள்ளது. பெரும்பாலும் பி.எட். படிப்பையும், எம்.எட். படிப்பையும் 2 ஆண்டுகளாக உயர்த்துகிறது.

இந்த 2 ஆண்டு படிப்பு அடுத்த கல்வி(2015-2016) ஆண்டில் இருந்து அமல்படுத்தப்படுகிறது.பி.எட்., எம்.எட். படிப்புகள் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டால் ஆசிரியர்களும் நன்றாக பயிற்சி பெற்று மாணவர்களுக்கு இப்போது உள்ளதை விட மேலும் சிறப்பாக கல்வி கற்பிக்க முடியும்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி