Skip to main content

குரூப் 1 முதல்நிலை தேர்வு கீ ஆன்சர் டி.என்.பி.எஸ்.சி

குரூப் 1 முதல்நிலை தேர்வு கீ ஆன்சர் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியீடு

குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான கீ ஆன்சர் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப்-1 பதவியில் அடங்கிய துணை கலெக் டர் (3), போலீஸ் டிஎஸ்பி (33), வணிகவரித் துறை இணை ஆணையாளர் (33) மற்றும்
ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் (10) ஆகிய 79 பதவிகளுக்கான முதல் நிலை தேர்வை கடந்த 20ம் தேதி நடத்தியது.
இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் மொத்தம் 1 லட்சத்து 62 ஆயிரத்து 606 பேர் அனுமதிக்கப்பட்டனர். தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 32 மாவட்டங்களில் 557 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், வெறும் 45 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். அதாவது 73,173 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். சென்னையில் 14,983 பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில் குரூப் 1 முதல்நிலை எழுத்து தேர்வுக்கான விடைகளை (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி இணைய தளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.net பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

ஆன்சர் கீயில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால் வருகிற 31ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று அறிவிக் கப்பட்டுள்ளது. இது குறித்து டி.என். பி.எஸ்.சி. அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஆன்சர் கீ தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் தேர்வர்கள் தெரிவிக்கலாம். அது குறித்து வல்லுனர் குழு ஆய்வு செய்யும். அதன் பின்னர், புதிய ஆன்சர் கீ வெளியிடப் படும். தேர்வு முடிவுகளை குறைந்த பட்சம் 2 அல்லது 3 மாதத்திற்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா