Skip to main content

தமிழகத்தில் புதிதாக 1,382 ஆசிரியர் பணியிடங்கள் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 382 ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும், தாய், தந்தையை இழந்த மாணவர்களின் கல்விக்காக வைப்பீடு செய்யப்படும் நிதியானது ரூ.50
ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

 இதுகுறித்து, சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:

       நடப்புக் கல்வியாண்டில் 25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகமுள்ள 128 குடியிருப்புப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளுக்கு தலா ஒரு தொடக்கப்பள்ளி வீதம் 128 பள்ளிகள் தொடங்கப்படும். இதற்கென 256 ஆசிரியர்கள் (ஒரு தலைமை ஆசிரியர், ஒரு இடைநிலை ஆசிரியர்) நியமிக்கப்படுவர். இந்தப் பள்ளிகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

         இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி மூன்று கிலோமீட்டருக்கு ஒரு நடுநிலைப் பள்ளி அவசியம். அதன்படி, பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் 19 மாவட்டங்களில் 42 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும். இதற்கென 126 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.

          மேலும், நடப்பு கல்வியாண்டில் 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும். இந்தப் பள்ளிகளுக்கென 50 தலைமை ஆசிரியர்கள், 250 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 300 ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் நிரப்பப்படும்.

   ஆயிரம் பணியிடங்கள்: கடந்த மூன்று ஆண்டுகளில் 300 அரசு, மாநகராட்சி, நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. நடப்பு கல்வியாண்டில் 100 பள்ளிகள் அதுபோன்ற தரம் உயர்த்தப்படுகின்றன. இதற்கென 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் ஆயிரம் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.

      வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை விபத்தில் இறந்தாலோ, நிரந்தர முடக்கம் அடைந்தாலோ அவர்களின் குழந்தைகள் கல்வியை தொடர்ந்து கற்கும் வகையில், ரூ.50 ஆயிரம் வைப்பீடாக வைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொகை ரூ.75 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகை மற்றும் அதன் முதிர்வுத் தொகை மாணவ-மாணவியரின் கல்விச் செலவு, பராமரிப்புக்காக பயன்படுத்தப்படும்.

          கழிவறைகள் பராமரிப்பு: தமிழகத்தில் கழிவறைகள் இல்லாத 2 ஆயிரத்து 57 பள்ளிகளுக்கு கழிவறை வசதிகள் செய்யப்பட்டன. இந்தக் கழிவறைகளை பராமரிக்க ரூ.160.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதனால், 56 லட்சத்து 5 ஆயிரம் மாணவ, மாணவியர் பயன் பெறுவர் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா