Skip to main content

தபால்நிலையங்களில் இனி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம்

ஜூலை மாதம் வந்தால், சென்னை வாசிகள் தபால் நிலையங்களிலேயே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் நல்வசதி கிடைக்கும்.இதற்காக தபால் துறையும், மண்டல பாஸ்போர்ட் அலுவலகமும் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு எப்படி இச்சேவை சுமுகமாக்குவது என திட்டங்களை வகுத்து வருகிறது. 
மேலும், எந்தெந்த தபால் நிலையங்களில் இந்த சேவையை அளிக்கலா என்று
ஆராய்ந்து வருவதாக தெரிகிறது.இது குறித்து தபால் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்: "பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வேண்டி வரும் வாடிக்கையாளர்கள் அங்குள்ள ஊழியர்களிடம் விண்ணப்ப படிவத்தை பெற்று விபரங்களை பூர்த்தி செய்து கொடுத்தால் அதிலிருக்கும் தகவல்களை ஊழியர் ஆன்லைன் விண்ணப்பத்தில் பதிவு செய்வார்.

விண்ணப்பதாரர்கள், தங்கள் வயதுச் சான்று, இருப்பிடச் சான்று போன்ற ஆவணங்களை எடுத்துச் செல்வது அவசியம். தபால் ஊழியர்களுக்கு, விண்ணப்பங்களை எப்படி பூர்த்தி செய்ய வேண்டும் என விண்ணப்பதாரர்களுக்கு உதவும் வகையில் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டவுடன் விண்ணப்பதாரருக்கு அதற்காக ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் பாஸ்போர்ட் மையங்களில் நடைபெறும் நேர்காணலுக்கான தேதி குறிப்பிடப்பட்டிருக்கும்.முதற்கட்டமாக இத்திட்டம், சென்னை, வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் மொத்தம் 25 தபால் அலுவலகங்களில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் குறிப்பாக 10 தபால் நிலையங்களில் இந்த சேவை வழங்கப்படவுள்ளதாகவும். மக்கள் வரவேற்பை பொறுத்து படிப்படியாக இச்சேவை விரிவாக்கம் செய்யப்படும் என்றும் தபால் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

கட்டண விபரம்:

தபால்நிலையங்களில், பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வாடிக்கையாளர்கள் ரூ.100 செலுத்த வேண்டும். ஆன்லைன் சேவையைப் பெற இக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.கட்டணத்தை ஆன்லைனிலும் செலுத்தலாம் இல்லையெனில் பாரத ஸ்டேட் வங்கி மூலமும் செலுத்தலாம் என போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் அலெக்சாண்டர் தெரிவித்தார்.விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, பதிவு செய்யும் பணியை மட்டுமே தபால்துறை ஊழியர்கள் செய்வார்கள் என்றும் விண்ணப்பதாரர் விபரங்களை சரிபார்க்கும் பணியை தபால்துறை மேற்கொள்ளாது என்றும் அவர் கூறினார்.மேலும் தபால் ஊழியர்கள் பல விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்யு எதுவாக அவர்களுக்கு பிரத்யேக கணினி பயன்பாட்டு பெயர் மற்றும் ஐ.டி. வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு