Skip to main content

'கவுன்சிலிங்'கை புறக்கணித்த 49 ஆசிரியர்கள்; தொலைதூர மாவட்டங்களுக்கு 'தூக்கியடிப்பு'

மதுரை மதுரையில் 'கவுன்சிலிங்'கை புறக்கணித்த 49 ஆசிரியர் பயிற்றுனர்களை, தொலைதுார மாவட்டங்களுக்கு பணிமாற்றம் செய்து நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்றே (ஜூன் 18) பணியில் சேர அவகாசம் கொடுக்கப்பட்டுஉள்ளது.

அனைவருக்கும் கல்வித் திட்ட ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான பணிநிரவல்
'கவுன்சிலிங்', மதுரையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், 49 பேர் புறக்கணித்தனர். மேலும், 'பணிநிரவலில் ஆசிரியர் பயிற்றுனர்களை சேர்க்கக் கூடாது' என ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இதனால், அன்றைய 'கவுன்சிலிங்'கில் பங்கேற்ற 13 பேருக்கு மட்டும் பணிமாறுதலுக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், நேற்று மாலை ஆசிரியர் பயிற்றுனர்களின் மனுவை தள்ளுபடி செய்து கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, 'கவுன்சிலிங்'கை புறக்கணித்த 49 பேருக்கும் கல்வித்துறையே மாறுதல் பணிகள் ஒதுக்கீடு செய்து, அதற்கான 'ஆர்டர்'கள் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவர்கள் அனைவருக்கும் மதுரையில் இருந்து நாகபட்டினம், திருவள்ளூர், வேலுார், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர். "நாங்கள் கோர்ட்டிற்கு சென்றதால் தான் எங்களை தொலைதுார மாவட்டங்களுக்கு மாறுதல் செய்து கல்வி அதிகாரிகள் பழி தீர்த்துள்ளனர்," என ஆசிரியர் பயிற்றுனர்கள் தெரிவித்தனர்.

முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி கூறுகையில், ''கல்வித்துறை உயர் அதிகாரிகள் வழிகாட்டுதலின்படி தான் 49 பேருக்கும் மாறுதல் 'ஆர்டர்'கள் கொடுக்கப்பட்டன. முதல் நாள் 'கவுன்சிலிங்'கில் பங்கேற்றவர்கள், அருகே உள்ள மாவட்டங்களின் காலி இடங்களை தேர்வு செய்துவிட்டனர். மற்றவர்களும் பக்கத்து மாவட்டங்களுக்கு தான் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்,'' என்றார்.

6 இடங்களுக்கு 9 பேரா? 
'கவுன்சிலிங்'கை புறக்கணித்த ஆசிரியர் பயிற்றுனர்களை தொலைதுார மாவட்டங்களுக்கு மாறுதல் செய்துள்ளதாக சர்ச்சை எழுந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மொத்தமே 6 காலிப் பணியிடங்கள் தான் 'கவுன்சிலிங்'கில் காண்பிக்கப்பட்டன. ஆனால், 49 பேரில் 9 பேரை நீலகிரி மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்துள்ளனர், என ஆசிரியர் பயிற்றுனர்கள் தெரிவித்தனர்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்