Skip to main content

கணித மேதை காரல் பெட்ரிக் காஸ் பிறந்த தினம் இன்று,

1781ம் ஆண்டு ஜெர்மனியில் ஒரு கட்டட மேஸ்திரியான தன்னுடைய தந்தையின் கூலிக்கணக்கில் சில தொழிலாளர்களுக்குப் போடப்ப்ட்ட தொகையில் தவறு நேர்ந்திருப்பதை மூன்று வயது குழந்தை சுட்டிக்காட்டியது. ஒரு நாள் முழுவதும் தலையைப் பிய்த்துக்கொண்டு கணக்கிட்டால் குழந்தை சொன்னது சரிதான், பேச்சு வருவதற்கு முன்பே எண்களுடன்
விளையாடியதைப் பார்த்து பெற்றோர் பூரித்தனர். 


ஏழாவது வயதில் ஒரு நாள் வகுப்பில் நுழைந்ததுமே, எல்லா மாணவர்களையும் பேசாமல் இருக்கச் செய்வதற்காக ஆசிரியர் கொடுத்திருந்த ஒரு கணக்கை நொடியில் முடித்து அவரை அசர வைத்தான் சிறுவன் காஸ். 1 இலிருந்து 100 வரையுள்ள முழு எண்களின் கூட்டுத் தொகையைக் கணக்கிடும் கணிப்புதான் அது. காஸுக்கு உடனே தோன்றியது: 1 முதல் 100 வரையில் உள்ள எண்களில் 50 ஜோடிகள் இருக்கின்றன; அதாவது, {1, 100}, {2, 99}, {3, 98}, முதலியவை; ஒவ்வொன்றின் கூட்டுத்தொகை 101. ஆக 50 ஜோடிகளின் கூட்டுத்தொகை 5050. ஆசிரியருக்கு மாணவன்மேல் உவகை பொங்கியது. பையனை பள்ளி நேரங்களுக்கு அப்பால் கணிதத்தின் மற்ற நெளிவு சுளுவுகளையெல்லம் கற்றுத் தருவதற்காக அனுமதி கேட்டு அவன் பெற்றோர்களை அணுகினார்


அவர் கணிதம், இயற்பியல், வானியல்,புவிப்பரப்பு ஆகிய நான்கு துறைகளிலும் கணிசமாகப் பங்களித்தவர். கணிதத்தில், எண் கோட்பாடு, பகுவியல், வகையீட்டு வடிவியல் ஆகிய மூன்றிலும் பற்பல விதங்களில் அடிக்கல் நாட்டி அவர் காலத்திலேயே கோபுரம் எழுப்பினவர். கணிப்புகளில் அபார வல்லமை பொருந்தியவராக இருந்ததால், வானியல், புவிப் பரப்பு, எண் கோட்பாடு இம்மூன்றிலும் இன்றியமையாத நீண்ட கணிப்புகளைச் செய்து சாதனை புரிந்தவர்.


கணிதத்திலும் அதன் இணையிலான இயற்பியலிலும் காஸின் பங்களிப்பு அவரி வரலாற்றில் தலைசிறந்த மேதைகளில் ஒருவராக்கியது. கணிதவியலின் அலகான ‘காஸ்’ அவரது நினைவாக சூட்டப்பட்டதுதான். அடிப்படைகணிதம், லாக்கணிதம் மட்டுமின்றி கிரேக்கம், லத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் டேனிஷ் மொழிகளையும் கற்றுத்தேர்ந்தார். இரு தனித்தனி விசைகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது மூன்றாவதாக ஒரு புதியவிசை புதிய திசையில் முளைப்பதை காஸ் கண்டுபிடித்தார்.




Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்