Skip to main content

மாணவர் உடல் திறனை மேம்படுத்த பயிற்சி முகாம்கள்

பள்ளிகளில் தேர்வு முடிந்த நிலையில் மாணவர்கள் விளையாட்டுக்களில் தனிக்கவனம் செலுத்தி உடல்திறனை வலுப்படுத்துவதற்காக பயிற்சி முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.

எறிபந்து பயிற்சி முகாம் கரூரில் இன்று துவக்கம்

கரூர்: "கோடைகால எறிபந்து முகாம் இன்று துவங்குகிறது" என, மாவட்ட எறிபந்து கழக தலைவர் நல்லசாமி கூறினார்.

அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கோடை கால எறிபந்து பயிற்சி முகாம், மாவட்ட எறிபந்து கழகமும், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இணைந்து நடத்தவுள்ளன.

இந்த பயிற்சி முகாம் இன்று முதல் மே 2ம் தேதி வரை வாங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தினமும் காலை 6.30மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும். பயிற்சி முகாமில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் சான்றிதழ் வழங்கப்படும்.

முகாமில், பங்கேற்க எந்தவித கட்டணமும் இல்லை. மேலும், விபரங்களுக்கு கரூர் மாவட்ட எறிபந்து கழக செயலாளர் மற்றும் வாங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராஜாவின் மொபைல் ஃபோன் எண்ணை 94422-42485 தொடர்பு கொள்ள வேண்டும்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்