Skip to main content

இன்று(28/04/2014)

ஏப்ரல் 28

நிகழ்வுகள்

1192 - ஜெருசலேம் மன்னன் முதலாம் கொன்ராட் முடிசூடி இரண்டாம் நாள் கொலை செய்யப்பட்டான்.

1792 - பிரான்ஸ் ஆஸ்திரிய நெதர்லாந்தை முற்றுகையிட்டது.

1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் அட்மிரல் டேவிட் ஃபராகுட் கூட்டமைப்பிடம் இருந்து லூசியானாவின் நியூ ஓர்லென்ஸ் நகரைக்
கைப்பற்றினான்.

1876 - இந்தியாவின் அரசியாக விக்டோரியா மகாராணி தெரிவு செய்யப்பட்டமை லண்டன் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது.

1920 - அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.

1932 - மஞ்சள் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.

1945 - முசோலினியும் அவனது மனைவியும் இத்தாலிய எதிர்ப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1952 - இரண்டாம் உலகப் போரின் போது ஐக்கிய அமெரிக்காவினால் கைப்பற்றப்பட்ட ஜப்பானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின.

1965 - டொமினிக்கன் குடியரசில் ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் தரையிறங்கினர்.

1978 - ஆப்கானிஸ்தான் அதிபர் முகமது டாவூட் கான் கம்யூனிச சார்புப் போராளிகளால் பதவியிறக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.

1995 - பலாலியில் அவ்ரோ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதற்கு அடுத்த நாள் இன்னுமொரு விமானம் வீழ்த்தப்பட்டது.

1996 - அவுஸ்திரேலியா, தாஸ்மேனியாவில் "மார்ட்டின் பிறையன்ட்" என்பவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 35 பேர் கொல்லப்பட்டு 37 பேர் காயமடைந்தனர்.

2000 - இலங்கை இராணுவத்தினருக்கெதிரான விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை முடிவுக்கு வந்தது.

2001 - கோடீஸ்வரர் டென்னிஸ் டீட்டோ என்பவர் விண்வெளிக்குச் சென்ற முதல் உல்லாசப் பயணியானார்.

2005 - இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் கொழும்பில் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.




பிறப்புகள்]

1758 - ஜேம்ஸ் மன்ரோ, ஐக்கிய அமெரிக்காவின் ஐந்தாவது குடியரசுத் தலைவர் (இ. 1831)

1937 - சதாம் உசேன் - ஈராக் நாட்டின் முன்னாள் அதிபர் (இ. 2006)

இறப்புகள்

1942 - உ. வே. சாமிநாதையர், தமிழறிஞர் (பி. 1855)

1945 - முசோலினி, இத்தாலிய நாட்டு சர்வாதிகாரி (பி. 1883)

1955 - தி. வே. சுந்தரம் அய்யங்கார், இந்திய தொழிலதிபர் (பி. 1877

1999 - ஆர்தர் சவ்லோவ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1921)

2005 - தர்மரத்தினம் சிவராம், ஈழத்து ஊடகவியலாளர் (பி. 1959)

சிறப்பு நாள்

வேலையின் போது பாதுகாப்புக்கும் நலத்துக்குமான உலக நாள்

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்