Skip to main content

குரூப்–2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு 50 சதவீதம் பேர் வரவில்லை

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசுப்பணிகளில் காலியாக உள்ள இடங்களை தேர்வு வைத்து நிரப்பி வருகிறது. அதன்படி கடந்த 2012–ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற குரூப்–2 தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டு 2 கட்டமாக கலந்தாய்வு நடத்தப்பட்டு உள்ளன. அதன் மூலம்
941 இடங்கள் நிரப்பப்பட்டு விட்டன.

நேற்று 170 இடங்களை நிரப்ப சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்வுக்கு 197 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்களில் 96 பேர்கள் மட்டுமே வந்திருந்தனர். 101 பேர் வரவில்லை.

ஏன் இவ்வளவு பேர் வரவில்லை என்று கேட்டதற்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அதிகாரி ஒருவர் கூறுகையில் வராதவர்கள் பலர், ஏற்கனவே அரசுப்பணியில் இதை சம்பளம் அதிகமாக வாங்கிக்கொண்டிருப்பார்கள்.அதனால் இந்த பதவி எதற்கு என்று வராமல் இருந்து இருக்கலாம் என்றார்.


Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்