Skip to main content

தமிழ், ஆங்கிலத்தில் 'நோட்டா': ஐகோர்ட்டில் தேர்தல் கமிஷன் பதில்

ஓட்டு சீட்டில், 'நோட்டா' (யாருக்கும் ஓட்டு இல்லை) என, தமிழ், ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருக்கும்' என, சென்னை உயர்நீதிமன்றத்தில், தேர்தல் கமிஷன் பதிலளித்துள்ளது. இதையடுத்து, இவ்வழக்கு, முடிவுக்கு வந்தது.


சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர், சத்தியசந்திரன், தாக்கல் செய்த மனுவில், 'ஓட்டுப் பதிவு இயந்திரத்தில், வேட்பாளர்களுக்கு என, சின்னங்கள் இருக்கும். எந்த வேட்பாளருக்கும், ஓட்டுப் போட விரும்பாதவர்கள், தங்கள் விருப்பத்தை பதிவு செய்ய ஏதுவாக, நோட்டா என்ற பட்டன் அமைக்கப்படுகிறது. அதற்கு, சின்னம் ஒதுக்க, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. இம்மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) அக்னி ஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. தேர்தல் கமிஷன் சார்பில், மூத்த வழக்கறிஞர், ஜி.ராஜகோபால், ''நோட்டா பற்றி, தேர்தல் கமிஷன் கவனத்தில் கொண்டுள்ளது. ஓட்டுச் சீட்டில், ஆங்கிலம், தமிழில், நோட்டா அச்சிடப்பட்டிருக்கும்,'' என்றார். தேர்தல் கமிஷன் தரப்பில் வெளியிடப்பட்ட, பத்திரிகை குறிப்பையும், கோர்ட்டில் தாக்கல் செய்தார். மனுதாரர் தரப்பில், நோட்டா சின்னம் பற்றி பரிந்துரை செய்ததை, தேர்தல் கமிஷன் பரிசீலிக்கும் எனவும், தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இவ்வழக்கை, முதல் பெஞ்ச் பைசல் செய்தது. தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கறுப்பு நிற பின்னணியில், செவ்வக வடிவத்துக்குள், நோட்டா என, ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும். ஓட்டுச் சீட்டில், தமிழில், 'மேற்காணும் நபர்களில் எவருமில்லை' எனவும் அச்சிடப்பட்டிருக்கும்' என, கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா