நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வாணையர் (பொறுப்பு) முனைவர் கண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தோடு இணைந்த கல்லூரிகளை சேர்ந்த ஏப்ரல் 2014க்கான இளநிலை மற்றும் முதுநிலை தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வருகிற ஏப்ரல் 16ம் தேதி முதல் தேர்வுகள் நடைபெற உள்ளன. இளநிலை மற்றும் முதுநிலை 1999ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை பயின்ற மாணவர்களில் இதுவரை தேர்வுக்கான விண்ணப்பம் அனுப்பாதவர்கள் தேர்வுக் கட்டணத்துடன் ரூ.500க்கான அபராத கட்டணம் சேர்த்து தேர்வுக்கான விண்ணப்பப்படிவத்தை ஏப்ரல் 10ஆம் தேதிக்குள், தேர்வாணையர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், நெல்லை 12 என்ற முகவரிக்கு கிடைக்குமாறு சமர்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி
Comments
Post a Comment