Skip to main content

PRE KG, LKG மற்றும் UKG க்கு புதிய பாடத்திட்டம்

அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி உள்ளிட்ட கேஜி வகுப்புக்களுக்கான பாட திட்டங்களை பள்ளிக் கல்வித்துறை வடிவமைத்துள்ளது.    
  நடப்பாண்டில் 32 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழியிலான மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ப்ரீ கேஜி, எல்கேஜி, யுகேஜி ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்களை பள்ளிக்கல்வித் துறை வடிவமைத்துள்ளது.

இந்த புதிய பாடத்திட்டங்கள் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதை பார்த்து, ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள், வரும் 30ம் தேதிக்குள் கருத்துகளை பதிவு செய்யலாம் என அந்த துறையின் இயக்குனர் அறிவொளி தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழி மழலையர் வகுப்புகள் துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான, எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர், அறிவொளி வெளியிட்ட செய்திக்குறிப்பு:அதன்படி, ப்ரீ கே.ஜி., எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகளுக்கு, பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டத்தின் விபரங்களை, www.tnscert.org என்ற, இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

பாடத்திட்டம் குறித்து, கல்வித் துறை வல்லுனர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் கருத்துகளை, வரும், 30க்குள் கடிதம் அல்லது, awpb2018@gmail.com என்ற, இ-மெயில் வாயிலாக அனுப்பலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்