Skip to main content

தயார்! நாட்டின் புதிய கல்வி கொள்கை வரைவு... பல்வேறு அதிரடி சீர்திருத்தங்கள் சேர்ப்பு

புதுடில்லி : நாட்டின் புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு, பல கட்டங்களுக்கு பின், இறுதியாக, தயார் நிலையில் உள்ளது; இம் மாதம் கடைசியில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையிடம், இந்த கொள்கை வரைவுசமர்ப்பிக்கப்பட உள்ளது. இதில், பல்வேறு அதிரடி சீர்திருத்தங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.



நாட்டின், புதிய கல்வி, கொள்கை, வரைவு,தயார்! 

நாட்டின் கல்விக் கொள்கை, 1986ல், தயாரிக்கப் பட்டது; பின், 1992ல், ஆய்வு செய்து, திருத்தங் கள் மேற்கொள்ளப்பட்டன. மாறி வரும் சமூக, பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப, புதிய கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.


கடந்த, 2014ல், லோக்சபா தேர்தல் நடந்தபோது, 'புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும்' என, பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்து இருந்தார்.பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட தாமதங்களை தொடர்ந்து, கல்விக் கொள்கை வரைவை தயாரிக்க, புதிய குழு, 2017, ஜூனில் உருவாக்கப் பட்டது. இக் குழுவுக்கு, 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவர், கஸ்துாரி ரங்கன் தலைவராக நியமிக்கப்பட்டார்.

கடந்த, ஜூலை மாதத்தில், கல்விக் கொள்கை

வரைவு தயாரித்து சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டு இருந்தது; பின், ஆக., 31க்கு தள்ளிவைக்கப்பட்டது. அப்போதும் பணி முடியாததால், அக்., 31க்குள் சமர்ப்பிக்கும்படி, கெடு நீட்டிக்கப்பட்டது. இந் நிலையில், புதிய கல்விக் கொள்கை வரைவு, இறுதி செய்யப்பட்டு, தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.

மத்திய அரசு, இதுவரை செய்துள்ள பல்வேறு சீர்திருத்தங்களுடன் ஒத்து போகும் வகையில், புதிய கல்விக் கொள்கை வரைவில் ஷரத்துகள் இருக்கும் என, தகவல்கள் கூறுகின்றன.பாரம்பரிய அறிவு, இந்திய மொழிகள், கணிதம் போன்ற வற்றுக்கு, பள்ளி அளவிலான பாடத் திட்டங்களில் முக்கியத்துவம் தரப்படும் எனத் தெரிகிறது.

விளையாட்டுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றும், முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள், பாடங்களில் சேர்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர், பல சந்தர்ப்பங் களில் கருத்து தெரிவித்துள்ளார்.


வரும், 2020 - 2040 காலத்தை கருத்தில் வைத்து, கல்விக் கொள்கை வரைவு இருக்கும் என்றும், பார்லிமென்டின் இரு சபைகளிலும்சமர்ப்பிக்க போதிய அவகாசம் கிடைக்கும் என்றும், அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

புதிய கல்விக் கொள்கை வரைவு, இம்மாத இறுதி யில், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.இந்த வரைவை, மனித வள மேம்பாட்டுத் துறை கவனமாக ஆய்வு செய்து, தேவையான

திருத்தங்களை செய்த பின், பார்லி.,யில் சமர்ப்பிக்க உள்ளது.

ஹரியானா பல்கலைக்கு கவுரவம்!


'பிரிக்ஸ்' எனப்படும் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள, பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள கல்லுாரிகளின் தரம் ஆய்வு செய்யப்பட்டு, 'கியூ.எஸ்., - பிரிக்ஸ் பல்கலை தர வரிசை' என்ற பெயரில் வெளியிடப்படுகிறது. பிரிக்ஸ் நாடுகளில் உள்ள, 9,000 பல்கலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் இடம்பெற்ற, 31 புதிய பல்கலைகளில், இந்தியாவைச் சேர்ந்த, 14 பல்கலைகளும் உள்ளன.


'கியூ.எஸ்., - பிரிக்ஸ் பல்கலை தரவரிசை' பட்டியலில் இடம்பெற்ற, முதல், 3 சதவீத பல்கலை களில், மிக இளைய பல்கலை என்ற அந்தஸ்து, ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள, ஓ.பி.ஜிண்டால் குளோபல் பல்கலைக்கு கிடைத்துள்ளது.

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.