Skip to main content

முட்டையை விட இந்த உணவுப்பொருட்களில் தான் சத்துக்கள் அதிகம்!

ஆரோக்கியமான வாழ்விற்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் நிறைந்த உணவுப் பொருட்கள் குறித்து இங்கு காண்போம்.

முட்டையில் அதிக அளவில் புரோட்டின்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளன. எனினும், முட்டையை விட சிலவகை தானிய வகைகளில் ஏராளமான வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன.


சோயாபீன்ஸ்

ஒரு கப் சமைக்கப்பட்ட சோயாபீன்ஸில், கிட்டத்தட்ட 28 கிராம் புரோட்டின் நிறைந்துள்ளது. சோயாபீன்ஸ் பல்வேறு உணவுகளுக்கு மூலப்பொருளாக இருக்கிறது. இதனை நொறுக்குதீனியாக பயன்படுத்தலாம்.

திணை

இந்த தானியத்தில் புரோட்டின், நார்ச்சத்துக்கள், அமினோ அமிலங்கள் ஆகியவை அதிகளவில் நிறைந்துள்ளன. குறிப்பாக தசைகளை வலுப்படுத்தும் அர்கினைன் உள்ளது. ஒரு கப் திணையில் 8 கிராம் புரோட்டின் உள்ளது குறிப்பிடத்தக்கது.



பூசணி விதைகள்

பூசணி விதைகளில் பாஸ்பரஸ், ஜிங்க், மக்னீசியம், புரோட்டின்கள் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. 30 கிராம் பூசணி விதையில் நிறைந்துள்ள புரோட்டின்கள், முட்டையில் உள்ள புரோட்டின் அளவை விட அதிகம்.



பயிறு மற்றும் பருப்பு

பருப்பு புரோட்டின்களுக்கான மிகச்சிறந்த உணவாக உள்ளது. இதில் உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்களும், அத்தியாவசியமான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. ஒரு கப் பருப்பில் 14 முதல் 16 கிராம் புரோட்டின் உள்ளது.

சணல் விதைகள்

சணல் விதைகளில் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் அதிக அளவு புரோட்டின்கள் உள்ளன. இரண்டு தேக்கரண்டி விதையில் 6.3 புரோட்டின் உள்ளன. மேலும், இதய ஆரோக்கியத்திற்கு அவசியமான லினோலிக் அமிலம், ஒமேகா 3 அமிலமும் உள்ளன.



கிரேக்க தயிர்

வீட்டில் தயாரிக்கப்படும் தயிரை விட, கிரேக்க தயிரில் புரோட்டின்களின் அளவு இருமடங்கு உள்ளது. இது வயிற்றை எளிதில் நிரப்புவதோடு ஆரோக்கியத்திற்கு அவசியமான புரோபயாடிக்குகள் சத்துகள் அதிகம் உள்ளது. ஒரு கப் கிரேக்க தயிரில் 17 கிராம் புரோட்டின் உள்ளது.

பன்னீர்

பன்னீரில் புரோட்டின் அதிகளவு உள்ளது. மேலும் இதில் குறைந்த அளவு கலோரிகளும் உள்ளன. 100 கிராம் பன்னீரில் 2 கிராம் புரோட்டின் உள்ளது. இது முட்டையில் உள்ள புரோட்டினை விட மிக அதிகமாகும்.

சுண்டல்

சுண்டலில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. வேக வைக்கப்பட்ட அரை கப் சுண்டலில் 7.3 கிராம் புரோட்டின் உள்ளது. இது ஆற்றலை அதிகரிப்பதுடன், பசியின்மையையும் கட்டுப்படுத்தும். மேலும், க்ளோசிகிட்டினின் அளவை அதிகரிக்க பயன்படுகிறது.

பாதாம் வெண்ணெய்

50 கிராம் பாதாம் வெண்ணெயில் 10 கிராம் புரோட்டின் உள்ளது. மேலும் பாதாம் வெண்ணெயில் கொழுப்புகள், வைட்டமின் ஈ, பயோட்டின் மற்றும் மங்கனீசு ஆகியவை உள்ளன.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா