Skip to main content

கல்லீரல் செயலிழந்து போக இவைகள் தான் காரணமாம்

மனித உடல் தினமும் ஆரோக்கியத்துடன் இயங்க தேவைப்படும் 500-க்கும் மேற்பட்ட செயல்பாடுகளுக்கு கல்லீரல் தான் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் தினமும் நாம் அன்றாடம் செய்யும் ஒருசில பழக்கவழக்கங்கள் நமது கல்லீரலை வலுவாக பாதிப்படைய வைக்கின்றன.

மருந்துகள்


அதிகமாக மருந்துகள் மற்றும் எனர்ஜியை அதிகரிக்க பயன்படுத்தப்படும் பவுடர்கள் எடுத்துக்கொள்வதன் மூலமாக கூட கல்லீரல் செயலிழப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

தூக்கமின்மை

இரவில் அதிக நேரம் தூங்கமால் இருப்பது கல்லீரலை பாதிக்கிறது, மேலும் தூக்கமின்மை கல்லீரலில் ஆக்ஸிடேடிவ் அழுத்தம் ஏற்பட காரணியாக இருக்கின்றது.

ஊட்டச்சத்து குறைபாடு

உணவில் சரியான அளவு ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் இருப்பது மற்றும் அதிகமான உடல்பருமன் போன்றவை கல்லீரலை பாதிப்படைய செய்கிறது.

கொழுப்பு

உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்பு அதிகம் நிறைந்த உணவுகளை தொடர்ந்து உண்டு வருவதும் கூட கல்லீரலை சுற்றி கொழுப்பு சேர காரணியாக இருக்கிறது.

பதப்படுத்தப்பட்ட உணவு

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கெட்டுப்போகாமல் இருக்க சேர்க்கப்படும் இரசாயனம், அடிக்ட்டிவ்ஸ் மற்றும் செயற்கை இனிப்பூட்டிகள் போன்றவை தான் கல்லீரல் பாதிப்பு ஏற்படுத்துகின்றன.

காய்கறி, பழங்கள்

தினமும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ், வைட்டமின் சி மற்றும் ஈ, ஜின்க், செலினியம் போன்றவை கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுகளை உண்டு வரலாம்.

நச்சுக்கள்

கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை போக்க வைட்டமின் பி சிறந்து செயல்புரிகிறது. பழங்கள், நட்ஸ், முட்டை, மீன், கோழி, பருப்பு போன்றவற்றில் வைட்டமின் பி சத்து மிகுதியாக இருக்கிறது.

அதிகமான கொலஸ்ட்ரால்

உடலில் எல்.டி.எல் எனும் தீய கொழுப்பு அதிகமாக சேர்வதால் இதயம் மட்டுமின்றி கல்லீரலும் பாதிப்படைகிறது.

காலை உணவை தவிர்ப்பது

கல்லீரல் செயல்திறன் குறைபாடு ஏற்படுவதற்கு காலை உணவை தவிர்ப்பதும் முக்கிய காரணமாக இருக்கிறது. உடல் எடை குறைக்க நினைக்கும் நபர்கள் தான் இந்த தவறை நிறைய செய்கிறார்கள்.

சிறுநீரை அடக்குதல்

சிலர் சிறுநீரை அடக்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள். இது மிகவும் தவறானது. இந்த பழக்கம், சிறுநீரகம் மற்றும் கல்லீரலை வலுவாக பாதிப்படைய செய்கின்றன.

ஆல்கஹால்

தினமும் மூன்று க்ளாஸ் ஆல்கஹால் பருகுவது கண்டிப்பாக கல்லீரல் புற்றுநோய் ஏற்படுத்தும் என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

புகை பிடித்தல்

சிகரட் மூலமாக உடலில் சேரும் நச்சுக்கள் மெல்ல மெல்ல கல்லீரலில் அதிகரித்து, ஆக்ஸிடேடிவ் அழுத்தம் உண்டாகி கல்லீரல் செல்களில் சேதம் ஏற்பட காரணியாக அமைகிறது.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா