Skip to main content

டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் கட்டுப்படுத்தும் வழிகள்....!

டெங்கு காய்ச்சல் கொசுவின் மூலம் பரவுகிறது. இது திடீரென பாதிப்பை ஏற்படுத்தி, அதிக காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி, கடுமையான தசை வலி, சோர்ந்து போதல், முட்டு வலி, கண்ணின் பின்புறம் வலி மற்றும் தோலில் ஒரு வகை கலர் மாற்றத்தை ஏற்படுத்தும். இதில் குறிப்பாக ஜுரம்,
தோல் நிற மாற்றம், தலைவலி தான் எல்லா டெங்கு நோயாளிகளுக்கும் இருக்கும் மூன்று நோய் அறிகுறிகள் ஆகும். இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை அதிகம், கடுமையாக பாதிக்கும். இந்த நோய், நான்கு வகையான வைரஸ்களால் உண்டாக்கபடுவதால், ஒருவருக்கே பலமுறை டெங்கு வரலாம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கடுமையான முட்டு மற்றும் தசை வழியால் பாதிக்கபடுவதால், இதற்கு எலும்பு ஒடியும் நோய் (BREAKBONE) நோய் என்று பெயர்.

எப்படி பரவுகிறது?: ஏடிஸ் ஈஜிப்டி என்னும் இந்த வைரஸ், பகலில் கடிக்கும் கொசு மூலம் பரவுகிறது. இந்த கொசு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபரை கடித்து தன்னுள் வைரஸை எடுத்து, மற்றவர்களுக்கு பரப்புகிறது. இந்த கொசு அநேகமாக வீட்டினுள் பதுங்கி இருக்கும். இந்த கொசு அநேகமாக மழை காலங்களில் இனபெருக்கம் செய்யும்.


மழை இல்லாத காலங்களில், தண்ணீர் தேங்கும் பூச்சாடிகள், பிளாஸ்டிக் பைகள், கேன்கள், தேங்காய் செரட்டைகள், டையர்கள், போன்றவற்றில் இனபெருக்கம் செய்கிறது. இந்த வைரஸ் கொசுக்கடி மூலம் இல்லாமல், நேரிடையாக நோயாளிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாது. அறிகுறிகள்: ஆரம்பதில் குளிர் ஜுரம், தலைவலி, கண்ணை சுற்றி வலி, முதுகு வலி, பின்னர் கடுமையான கால் மற்றும் மூட்டு வலி நோய் வந்து சில மணிநேரத்தில் வரும் காய்ச்சல். இலேசாக, நாடித்துடிப்பு குறைதல், இரத்த அழுத்தம் குறைதல், .கண்கள், சிவந்து போகலாம்.

உடலில் தோலில் சிகப்பு நிற மாற்றம் ஏற்படும். கழுத்து மற்றும் பிறப்பு உறுப்பு அருகே நெறிகட்டலாம். இந்த ஜுரம் மற்றும் மற்ற நோய் அறிகுறிகள் 2 முதல் 4 நாட்கள் வரை இருந்து, பின்னர் திடீரென உடல் வெப்பம் குறைந்து, அதிகமான வியர்வை ஏற்படும்.சிகிச்சை முறை இதற்கு தனியான மாத்திரை மருந்துகள் கிடையாது. காய்ச்சலை குறைக்க சாதாரண பரசெடமால், போதிய ஒய்வு, நன்றாக நீர் ஆகாரங்கள் உட்கொள்ளுதல் தான் இதற்கு சிகிச்சை.

மருத்துவர் அறிவுரை இல்லாமல் வலி நிவாரணிகள் எடுத்து கொள்ள கூடாது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் நிலவேம்பு குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. சித்த வைத்தியத்தின் மூலம் எளிதில் குணப்​படுத்தலாம் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பொதுமக்கள் கூடும் பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பல இடங்களிலும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.


நிலவேம்பு குடிநீர் டெங்கு காய்ச்சலால் குறையும் தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பப்பாளி இலைச்சாறு, ஆடா தொடை, மணப்பாகு வழங்கப்படுகிறது. இந்த மருந்துகளை தமிழக அரசே பரிந்துரைத்து வருகிறது. நிலவேம்பு குடிநீர் சூரணத்தில் நிலவேம்பு, வெட்டி வேர், விலாமிச்சு வேர், சந்தனத்தூள், பேய்புடல், கோரைக்கிழங்கு, சுக்கு, மிளகு, பற்பாடகம் என்று ஒன்பது வகையான இயற்கை மருந்துப் பொருட்கள் கலந்து இருக்கின்றன. இதில் நிலவேம்பு, விலாமிச்சு வேர், பேய்புடல், மிளகு, பற்​பாடகம் ஆகிய ஐந்து பொருட்களும் உடலின் வெப்பத்தை அகற்றி காய்ச்சலைப் போக்கும் தன்மை கொண்டவை.

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.