Skip to main content

இரத்தம் பற்றிய 25 அடிப்படை தகவல்கள்!

இரத்த ஓட்டத்தை கண்டரிந்தவர் - வில்லியம் ஹார்வி

இரத்த வகைகளைக் கண்பிடித்தவர் - கார்ல்லாண்ட் ஸ்டீனர்

இரத்த வகைகள் - A, B, AB, O

இரத்தத்தில் Rh Factor முதன்முதலில் எந்த உயிரியியல் இருந்து கண்டுபிடிக்க பட்டது - Rhesus குரங்கில்

இரத்தத்தில் Rh காரணி இருந்தால் - பாசிடிவ் (Positive)

இரத்தத்தில் Rh காரணி இல்லாத வகை - நெகடிவ் (Negative)

சராசரி எடையுள்ள மனித உடலில் இரத்த அளவு - 5 லிட்டர்

இரத்தம் சிவப்பாக இருக்க காரணம் - ஹீமோகுளோபின் என்ற நிறமி

இரத்தத்தில் உள்ள திரவப் பொருள் - பிளாஸ்மா (Plasma)

இரத்தத்தில் சராசரி குளூகோஸ் அளவு - 100-120mg%

மனித உடலில் சராசரி இரத்த அழுத்தம் - 120/80mm Hg

இரத்தத்தில் சக்கரை அளவை கட்டுப்படுத்தும் ஹார்மோன் - இன்சுலின்

அனைத்து வகையான இரத்தத்தை ஏற்றுக் கொள்ளும் இரத்த வகை - AB

அனைவருக்கும் இரத்தம் வழங்கும் இரத்த வகை - O

120 mm Hg என்பது - Systolic Pressure

80 mm Hg என்பது - Diastolic Pressure

இரத்த செல்களின் வகைகள் - 3

1. சிவப்பு இரத்த செல்கள்
2. வெள்ளை இரத்த செல்கள்
3. இரத்த தட்டுகள்


1. இரத்த சிவப்பு அணுக்கள்:-

இரத்த சிவப்பு அணுக்கள் வேறுபெயர் - எரித்ரோசைட்டுகள்

இரத்த சிவப்பு அணுக்கள் உருவாகும் இடம் - எலும்பு மஜ்ஜை

இரத்த சிவப்பு அணுக்கள் வடிவம் - இரு பக்கமும் குவித்த தட்டையான வட்ட வடிவம்

இரத்த சிவப்பு அணுக்கள் சிவப்பாக இருக்க காரணம் - ஹீமோகுளோபின்

ஆண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை - 5.2 மில்லியன்

பெண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை - 4.5 மில்லியன்

ஆண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் வாழ்நாள் - 120 நாட்கள்

பெண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் - 110 நாட்கள்

இரத்த சிவப்பு அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் - இரத்த சோகை (அனிமியா)

இரத்த சிவப்பு அணுக்கள் அதிகரித்தால் ஏற்படும் நோய் - பாலிசைதீமியா

2. இரத்த வெள்ளை அணுக்கள்:-

இரத்த வெள்ளை அணுக்கள் வேறு பெயர் - லியூகோசைட்டுகள்

இரத்த வெள்ளை அணுக்கள் உருவாகுமிடம் - எலும்பு மஜ்ஜை, நிணநீர் சுரப்பி

இரத்த வெள்ளை அணுக்கள் வடிவம் - வடிவமற்றது

இரத்த வெள்ளை அணுக்கள் ஆயுட்காலம் - 2 (அ) 3 வாரம்

இரத்த வெள்ளை அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் - லியூகோபினியா

இரத்த வெள்ளை அணுக்கள் அதிகமானால் ஏற்படும் நோய் - லூகீமியா

உடலின் போர்வீரர்கள் என்று அழைக்கப்படுவது - இரத்த வெள்ளை அணுக்கள்


லியூகோசைட்டுகள் வகைகள் - 2

1. துகளுள்ள வெள்ளை அணுக்கள்
2. துகளற்ற வெள்ளை அணுக்கள்

துகளுள்ள வெள்ளை அணுக்கள் வகைகள் 3

☆ நியூட்ரோஃபில்கள்
☆ இயோசினாஃபில்கள்
☆ பேசோஃபில்கள்

துகளற்ற வெள்ளை அணுக்கள் வகைகள் - 2

☆ லிம்போசைட்டுகள்
☆ மோனோசைட்டுகள்.


மனித உடலில் இரத்த வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை - 8000 - 10,000 வரை

இரத்த வெள்ளை அணுக்கள் விகிதாச்சார எண்ணிக்கை கீழ் வருமாறு:


நியூட்ரோஃபில்கள் - (60 - 70%)

இயோசினாஃபில்கள் - (0.5 - 3.0%)

பேசோஃபில்கள் - 0.1%

லிம்போசைட்டுகள் - (20 - 30%)

மோனோசைட்டுகள் - (1 - 4%)

3. இரத்த தட்டுகள் :-

இரத்த தட்டுகள் வேறு பெயர் - திராம்போசைட்டுகள் (பிளேட்லெட்டுகள்)

இரத்த தட்டுகள் வாழ்நாள் - 5 - 9 நாட்கள்.

இரத்த உறைதலில் முக்கிய பங்கு வகிப்பது - இரத்த தட்டுகள்

இரத்த தட்டுங்கள் எண்ணிக்கை - 2,50,000 - 5,00,000

இரத்த தட்டுங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைய காரணமான நோய் - டெங்கு ஜுரம்.

இரத்த தானம் செய்வீர்...!!

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்