Skip to main content

Today Rasipalan 25.9.2018

மேஷம் இன்று பெண்மணிகளுக்கு
அமைதியான நாளாக அமைகிறது. தெய்வ வழிபாட்டில் சிரத்தையுடன் ஈடுபடுவீர்கள். உடல் நலம் சீராக இருக்கும். சகோதர, சகோதரிகள் தேவைக்கேற்ப உதவிகளைச் செய்வார்கள். ஆனால் வருமானம் சுமாராகவே இருக்கும். தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7 


ரிஷபம் இன்று எவருக்கும் அவசரப்பட்டு வாக்கு கொடுக்கமாட்டீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் சொல்லுக்குக் கட்டுப்படுவார்கள். பெரிய எதிர்பார்ப்புகள் கைகூடும். அரசாங்க வழியிலும் சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9


மிதுனம் இன்று இதுவரை இல்லத்திற்கு வராத உறவினர்கள் இன்று வருவார்கள். பண வரவு நன்றாக இருக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் ஈடுபடுவீர்கள். ஆனாலும் அனைத்து விஷயங்களும் முடியும் வரை ஒரு பயம் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கடகம் இன்று தைரியத்துடன் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். கஷ்டங்களை திறமையாக எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். நுட்பமான விஷயங்களிலும் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியளிக்கும் செய்தி வந்து சேர்ந்து உங்களை திக்குமுக்காட வைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9



சிம்மம் இன்று பெற்றோரால் நலம் உண்டாகும். சமுதாயத்தில் பெரியவர்களை சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். அவர்களின் ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் முழுமையாகச் செயல்படுத்துவீர்கள். பொருளாதாரத்தில் தொய்வில்லாமல் சீரான வருமானம் வந்து கொண்டிருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7  

கன்னி இன்று நண்பர்களுக்கும், சகோதர சகோதரிகளுக்கும் சரியான நேரத்தில் தேவையான உதவிகளைச் செய்து பெருமையடைவீர்கள். அதேநேரம் எவரையும் கடிந்து பேச வேண்டாம். பிறரிடம் விட்டுக் கொடுத்து நடந்துகொள்வது நல்லது. வரவுகள் சீராக இருந்தாலும் செலவுகள் சற்று கூடுதலாகவே இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5 

துலாம் இன்று நண்பர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். அவர்களின் விஷயங்களில் அனாவசியமாக மூக்கை நுழைக்க வேண்டாம். மற்றபடி சாதுர்யமாகப் பேசுவீர்கள். வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளைத் தொடங்குவீர்கள். இல்லத்திலும் முக்கிய நிகழ்ச்சிகளை நடத்த முயல்வீர்கள். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை காணப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி நிறையும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7  

விருச்சிகம் இன்று வழக்கு விவகாரங்களில் இழுபறி ஏற்படும். மேலும் எந்தப் பத்திரத்தில் கையெழுத்திட்டாலும் எல்லா ஷரத்துக்களையும் நன்றாகப் படித்து புரிந்துகொண்டு கையெழுத்திடவும். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாகக் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வைப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 

தனுசு இன்று இறையருளும் தெய்வ நம்பிக்கையும் கூடும். உங்கள் திறமையில் இருந்து வந்த பின்தங்கிய நிலை இனி மாறும். வெப்பம் சம்பந்தபட்ட உடல் உபாதைகள் குறையும். தாயருடன் இருந்து வந்த கசப்புகள் மறையும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9  

மகரம் இன்று தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த பிணக்கு நிலை மறைந்து உறவு பிரகாசிக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். எனினும் மனைவி வழியில் உள்ள உறவினர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6 


கும்பம் இன்று எடுத்த காரியம் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு மேம்படும். உங்கள் சொல்லுக்குப் பிறர் மரியாதை கொடுப்பர். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9  

மீனம் இன்று கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலம் ஏற்படும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் சற்று தாமதமாக வந்தாலும் முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். பொருளாதாரம் எதிர்பார்த்தபடி இருக்காது. உடன் இருப்போரால் பிரச்சனைகள் வரலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.