Skip to main content

Govt E-seva மையங்களை அறிந்துகொள்ள New Android App!

மாநிலத்திலேயே முதன் முதலாக,
நெல்லை மாவட்டத்தில் சேவை மைய இருப்பிடம் உள்ளிட்ட விவரங்களை அறிந்துகொள்ளும் வகையில், சிஎஸ்சி நெல்லை என்ற செயலி அறிமுகம்செய்யப்பட்டுள்ளது.

பொதுச் சேவை மையங்களின் அவசியம் அதிகரித்துவருகிறது. அரசு அளிக்கும் அனைத்து வகையான சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்வதற்கு, சேவை மையங்களையே நாட வேண்டியுள்ளது. அதனால், நாம் இருக்கும் இடத்துக்கு அருகில் உள்ள சேவை மையங்கள், அவற்றின் தொடர்பு எண்கள் உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ளும் வகையில், சிஎஸ்சி நெல்லை என்கிற ஆண்ட்ராய்டு செயலியை நெல்லை மாவட்ட நிர்வாகம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இந்தச் செயலியை, மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தொடங்கிவைத்தார்.அப்போது,''தமிழக அரசின் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கு பொதுச் சேவை மையங்களையே நாடவேண்டிய அவசியம் உள்ளது. அந்த மையங்களின் வழியாகவே பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை அனுப்பவேண்டியிருக்கிறது. பொதுமக்கள், தங்களுக்குத் தேவையான நில ஆவணங்களில் பெயர் மாற்றம், சாதிச்சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் போன்ற வருவாய்த் துறையின் 20 சேவைகளுக்கும் சேவை மையம் மூலமாகவே மனு அளிக்கவேண்டியுள்ளது.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், அனாதைப் பெண் திருமண உதவித் திட்டம் போன்ற சமூக நலத் துறையின் 7 வகையான சேவைகளுக்கும் சேவை மையங்களைத் தேட வேண்டியிருக்கிறது. அத்துடன், தீயணைப்புத் துறையின் பல்வேறு தடையின்மைச் சான்றுகள், மின்சார கட்டணம் செலுத்துதல் போன்ற பல்வேறு சேவைகளுக்கும் பொதுச் சேவை மையங்களின் வழியாகவே கோரிக்கைகளை அனுப்ப வேண்டியுள்ளது.
நெல்லை மாவட்டம் முழுவதும் மொத்தம் 383 சேவை மையங்கள் செயல்படுத்தப்பட்டுவருக்கின்றன. ஆனாலும், இந்தச் சேவை மையங்களின் இருப்பிடம் சரியாக பொது மக்களுக்குத் தெரியாததால், வீணாக அலையவேண்டியுள்ளது. அதைச் சரிசெய்யும் விதமாக, வீட்டுக்கு அருகில் உள்ள பொதுச் சேவை மையத்தின் இருப்பிடத்தைத் தெரிந்துகொள்ள, தேசியத் தகவலியல் மையத்தின் (என்.ஐ.சி) மூலமாக இந்தச் செயலி தயாரிக்கப்பட்டு, மாநிலத்திலேயே முதன்முதலாக நெல்லை மாவட்ட நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆண்ட்ராய்டு மொபைலில் இந்தச் செயலியை கூகுள் ப்ளேஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தாங்கள் விரும்பும் மையத்தை அழுத்தினால், அதன் முகவரி, தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள், தங்கள் இருப்பிடத்திலிருந்து உத்தேச தூரம் ஆகிய விவரங்களை அறிந்துகொள்ளலாம். தொலைபேசி எண்ணின் மீது அழுத்தினால், நேரடியாக அந்த மையத்தின் அலுவலர்களைத் தொடர்புகொள்ளலாம். நெல்லை மாவட்ட மக்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்'' என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா