Skip to main content

பித்த வெடிப்பை போக்க இயற்கையான குறிப்புகள்...

பெண்கள் தங்கள் முகத்தைப் பராமரிக்க செலவிடும் நேரத்தில் சில நிமிடங்கள் கூட தங்கள் பாதங்களை கவனிக்க செலவு செய்வதில்லை. பெரும்பான்மையான பெண்களுக்கு பாதங்களில் ஏற்படும் பி
ரச்னை பித்த வெடிப்பு என்ன மருந்து போட்டாலும் இந்தப் பித்த வெடிப்பு மட்டும் போகவே மாட்டேங்குது என்று அலுத்துக் கொள்பவர்கள் ஏராளம்.

விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்து கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் பித்த வெடிப்பு முற்றிலும் குணமாகும்.

வேப்பிலை மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்புச் சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் பித்த வெடிப்பு முற்றிலும் நீங்கும்.


பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும் அவை உலர்ந்ததும பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால்‌ பித்த வெடிப்பு முழுவதும் குணமாகும்.

மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின் தண்ணீரால் கழுவ வேண்டும் இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு முழுவதும் குணமாகும்.


வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால் பித்த வெடிப்பு முழுவதும் குணமாகும்.


இரவு நேரத்தில் தூங்க போவதற்கு முன் காலை நன்றாக தேய்த்து கழுவி சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து தூங்க போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் நீங்கள் தடுக்கலாம்.

குளித்து முடித்ததும் பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின் பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்