Skip to main content

வங்கிகளின் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு : மத்திய அரசு உத்தரவு

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டிவிகிதத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டிற்கான, பி.பி.எஃப்., சிறுசேமிப்பு திட்டம் உள்ளிட்டவைகள் வட்டி விகித
த்தை 0.4% அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கிகளில் அதிகரித்து வரும் வைப்பு விகிதங்களுக்கு ஏற்ப. சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் காலாண்டு அடிப்படையில் அறிவிக்கப்படும்.

இதன்படி, 5 ஆண்டுகள் வரையிலான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு 8.3 சதவீதத்திற்கு பதில், 8.7 சதவீதம் வட்டி வழங்கப்பட உள்ளது. இந்த வட்டி ஒவ்வொரு காலாண்டின் போதும் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சேமிப்பு வைப்பு தொகைக்கான ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதமாகவே இருக்கும்.

  பிபிஎப் மற்றும் தேசிய சேமிப்பு சான்றிதழுக்கான ஆண்டு வட்டிவிகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கிஷான் விகாஸ் பத்திர வட்டிவிகிதம் 7.3 சதவீதத்தில் இருந்து 7.7 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2