Skip to main content

முளைக்கட்டிய பூண்டுகளின் நன்மைகள்!

பூண்டுகளை காற்றோட்டம் நிறைந்த இடத்தில் வைப்பதால், அது முளைக்கட்டி விடும். மேலும் சிலர் பூண்டு முளைக்கட்ட ஆரம்பித்து விட்டால் அவை உடலுக்கு தீங்கு தரும் என்று தூக்கி எறிந்துவிடுவார்கள்.


ஆனால் அதில் ஏராளமாக ஆரோக்கிய நன்மைகள் உள்ளது.அத்தகைய முளைக்கட்டிய பூண்டுகளை தூக்கி எறியாமல் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

நன்மைகள்

முளைக்கட்டிய பூண்டில் பைட்டோ கெமிக்கல்களின் உற்பத்தி தூண்டப்படுவதால், அது புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுத்து, புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
உடலில் நொதிகளின் செயல்பாட்டை மேம்படுத்தி, இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் கொழுப்புக்கள் படிவதைத் தடுத்து, இதய நோய்கள் வருவதை தடுக்கிறது.
ரத்தம் உறைவதைத் தடுத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கி, ரத்த அழுத்த பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் முளைக்கட்டிய பூண்டுகளில் ஏராளமாக இருப்பதால், இது சரும சுருக்கம் ஏற்படுவதை தடுத்து, முதுமைத் தோற்றத்தை தாமதமாக்குகிறது.
உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி, நோய்த்தொற்றுக்கள் மூலம் அடிக்கடி ஏற்படும் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
உடலினுள் பல்வேறு கிருமிகளை எதிர்த்துப் போராடி, ஆஸ்டியோபோரோசிஸ், மூட்டு பிரச்சனைகள், வீக்கம் மற்றும் தைராய்டு பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.
நரம்பு செல்கள் சீரழிவதைத் தடுத்து, உடலில் உள்ள செல்களுக்கு ஊட்டமளித்து, அதன் செயல்பாட்டை சீராக்கி, நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதை தடுக்கிறது.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா