Skip to main content

மருத்துவ குணம் மிக்க தூதுவளை இலை!

பசி இல்லாதவர்கள் இக்கீரையை நெய் விட்டு வதக்கி அரைத்து உணவில் சேர்த்து வந்தால் நாளடைவில் பசி தானாக உண்டாகும். தலை பாரம், உடல் வலி, மூக்கில் நீர் வருதல், முதலிய நோய்கள் நீங்கும்.


துளசி சாறுடன், தூது வளை சாறும் ஒரு தம்பளர் காய்ச்சிய பசும் பாலில் சிறிதளவு ஒரு வாரம் அருந்தி வந்தால் ஆஸ்துமா நோய் போல் இழுப்பும் சளியும் நீங்கும்.

தாது விருத்தியடைய தேவையான அளவு தூது வளை பூ, முருங்கை பூ இவற்றை உலர்த்தி எடுத்து இடித்து சக்கரை சேர்த்து காய்ச்சிய பசும் பாலில் கலந்து அருந்தி வந்தால் தாது விருத்தி உண்டாகி நரம்பு பலம் அடையும்.

உடல் பலமும், முக வசீகரமும் ,அழகும் பெறலாம். புத்தி தெளிவை உண்டாக்கும். அறிவு வளர்ச்சியை பெருக்கும். நிமோனியா, டைபாய்டு, கபவாத ஜீரம், கண்ணிவாத ஜீரம் போன்ற நோயிகளுக்கும் இக்கீரை மருந்தாகிறது.

வயிற்று வலி, நீரடைப்பு, வெள்ளை, வெட்டை போன்ற உபாதைகளும் நீங்கும். இளம் பெண்களுக்கு பால் சுரக்க செய்கிறது. ஜீரத்தால் ஏற்படும் காது மந்தம் ,காது எழுச்சி, காது குத்தல், மற்றும் நமைச்சல், உடல் எரிச்சல், செரியமந்தம், விந்து நஷ்டம் இலைகள் நீங்கும். வாய்வை சீர்படுத்தும்.

தூது வளை இலைகளை புதினா,கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றை நெய்யில் வதக்கி அரைத்து துவைலாக பயன்படுத்தலாம். தோசைமாவுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம்.

தூது வளை கீரையை நெய்யில் வதக்கி உப்பு, புளி, காரம், சேர்த்து அரைத்து துவைலாக பயன்படுத்தலாம். இக்கீரையை பசும் பாலுடன் சேர்த்து காய்ச்சி குடிக்கலாம்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா