இந்தியாவில் வாடிக்கையாளர் குறைகேட்பு அதிகாரியை வாட்ஸ்அப் நிறுவனம் நியமித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் சமூக ஊடகங்கள் தொடர்பான வழக்கில் வாட்ஸ் அப் நிறுவனம் குறைதீர்பு அதிகாரி நியமிக்கவில்லை, இந்திய சட்டங்களுக்கு கட்டுப்படுவதில்
லை என மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
மேலும், அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் வருவதால், பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் மீது கடுமையான நிலைப்பாட்டையும், கண்காணிப்பையும் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மத்திய தொலைத்தொடர்புத்துறை ரவிசங்கர் பிரசாத் கடந்த மாதம் வாட்ஸ்அப் தலைவர் கிரைஸ் டேனியலைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் வாட்ஸ்அப்பில் வதந்திகள் பரவுவது, பொய்யான செய்திகளை பரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்நிலையில், வாட்ஸ்அப் வாடிக்கையாளர் குறைகளை கேட்பதற்காக கோமல் லஹரி என்பவரை வாட்ஸ் அப் நிறுவனம் நியமித்துள்ளது. இதன் மூலம் வாட்ஸ் அப் பயணாளிகள் இமெயில் மூலம், வாட்ஸ் அப் செயலி மூலம் மொபைல் ஆப் மூலம் தங்களின் குறைகளை கோமல் லஹரிக்கு தெரிவித்து நிவாரணம் பெறலாம்.
Comments
Post a Comment