Skip to main content

ஓவிய ஆசிரியர் பணிப் பட்டியல் விவகாரம்: தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவு

அரசு பள்ளிகளில் தையல் மற்றும் ஓவிய ஆசிரியர் பணிகளுக்கான பட்டியலில் தகுதி இல்லாதவர்களின் பெயர்கள் இடம்பெற்ற விவகாரம் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், பள்ளிக் கல்வித்
துறை இயக்குநர் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது*
*இதுதொடர்பாக, சிவசங்கரி உள்ளிட்ட 11 பேர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் தையல் மற்றும் ஓவிய ஆசிரியர்களுக்கான 576 பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தியது. இந்த தேர்வின் முடிவுகள் கடந்த 2017 -ஆம் ஆண்டு செப்டம்பரில் வெளியிடப்பட்டது*
*இந்த பட்டியலில் தையல் மற்றும் ஓவிய ஆசிரியர் பணிகளுக்குத் தகுதி இல்லாதவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தனர்*
*இந்த மனு நீதிபதி சத்ருஹான புஜ் ஹரி முன் விசாரணைக்கு வந்தது*

*வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர், பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்*
*மேலும் இந்த பணிக்களுக்காக இதுவரை நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனவும் நீதிபதி தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்