Skip to main content

3,999 விலையில் Smartphone இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது ஹாங் காங்கை சேர்ந்த மொபைல் பிரான்டு
ஐவூமி (Ivoomi ) இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது. மிகக்குறைந்த விலையில் 18:9 ரேஷியோ ஃபுல்வியூ டிஸ்ப்ளே கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையுடன் Ivoomi ஐ ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.

மற்ற அம்சங்களை பொருத்த வரை 4.95 இன்ச் 480x960 பிக்சல் FWVGA+ 18:9 ஷேட்டர்ப்ரூஃப் டிஸ்ப்ளே, குவாட்-கோர் மீடியாடெக் MT6737M 64-பிட் பிராசஸர், 1 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.இந்தியாவில் பிளிகப்கார்ட் வெப்சைட்டில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் ஐவூமி ஐ ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரிலையன்ஸ் ஜியோ சார்பில் சிறப்பு சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

IVOOMI- I ப்ரோ சிறப்பம்சங்கள்:

- 4.95 இன்ச் 480x960 பிக்சல் FWVGA+ 18:9 ஷேட்டர்ப்ரூஃப் டிஸ்ப்ளே
- 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் MT6737M 64-பிட் பிராசஸர்
- மாலி-T720 GPU
- 1 ஜிபி ரேம்
- 8 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ஸ்மார்ட் எம்.இ. ஓ.எஸ். 3.0
- 5 எம்.பி. பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- ஃபேஸ் அன்லாக்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 2000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

 Ivoomi I Pro ஸ்மார்ட்போன் பிளாட்டினம் கோல்டு, இன்டி புளு, மேட் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரூ.3,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் ஐவூமி ஐ ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை பிளிப்கார்ட் வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக நடைபெறுகிறது.

புதிய ஐவூமி ஐ ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. கேஷ்பேக் தொகையை பெற வாடிக்கையாளர்கள் ரூ.198 அல்லது ரூ.299 விலைகளில் கிடைக்கும் சலுகையை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.