வேலூர்: ஒரே காம்பவுண்டுக்குள் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை படிக்கும் வகையில் முதல்கட்டமாக மாவட்டத்துக்கு ஒன்று வீதம் பள்ளிகளின் கட்டமைப்பை மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு, அரசு நிதியுதவி, சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 57 ஆ
யிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இதில் 25 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளும், 3,000 உயர்நிலைப்பள்ளிகளும், 2,800 மேல்நிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. அரசு, அரசு நிதியுதவி மட்டுமின்றி சுயநிதி
தொடக்கப்பள்ளிகளில் சேரும் குழந்தைகளும் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவுடன், 6ம் வகுப்புக்கு வேறு பள்ளிக்கு மாற வேண்டிய நிலை உள்ளது. அதேபோல் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் 9ம் வகுப்புக்கு வேறு உயர்நிலைப்பள்ளிக்கோ, மேல்நிலைப்பள்ளிக்கோ மாற வேண்டிய கட்டாயம் உள்ளது.
கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...
Comments
Post a Comment