Skip to main content

வெறும் ரூ. 2,500/- இல் வாஷிங் மிஷின்!

கோவை ரத்தினபுரியை சேர்ந்த முருகேசன் என்பவர் குறைந்த விலையில் வாஷிங் மெஷினை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார் .

தொடக்கத்தில் டேபிள் டாப் வெட் கிரைண்டர் உற்பத்தி செய்து வரும் நிறுவனம், மக்களுக்கு மிக குறைந்த விலையில் விற்று வந்தது. இந்நிலையில் இதன் அடுத்த முயற்சியாக வாஷிங் மெஷின் கொடுவரப்பட்டு உள்ளது.

புதிய வாஷிங் மிஷின் பற்றி அவர் கூறுகையில், எங்கள் நிறுவனத்தின் புதிய வாஷிங் மிஷின் விலை குறைவு என்றாலும், தரத்திலும், வசதிகளிலும் மற்ற நிறுவனத்தின் வாஷிங் மிஷினுடன் எந்த வகையிலும் குறைந்தது அல்ல என்கிறார்.

புதிய வாஷிங் மிஷினின் விலை ரூ.2,500. ஜி.எஸ்.டி. வரியுடன் சேர்த்து ரூ.2,950. ஓர் ஆண்டு வாரண்டியும் அளிக்கப்படுகிறது. புதிய வாஷிங் மிஷினுக்கு கோவை மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த புதிய வாஷிங் மிஷின் 7 நிமிடங்களில் துணி துவைத்து முடித்துவிடும் என்றும் எளிதாக எங்கு வேண்டுமானாலும் கொண்டு என்றும் வாஷிங் மிஷின் தயாரிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

"சர்வதேச பிராண்டகளுக்கு ஈடாக விளம்பரம் செய்து விற்பனை செய்யும் பட்சத்தில் விலை அதிகரிக்க நேரிடலாம் என்பதால் ஏழை மக்கள் குறைந்த விலையில் பெற்று பயன்பெற வேண்டும் என்பதால் போஸ்டர் ,நோட்டீஸ் என சிறிய அளவிலான விளம்பர யுக்தியைத்தான் கையாண்டு வருகிறார் முருகேசன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாஷிங் மெஷினின் முக்கிய சிறப்பம்சங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

குறைந்த அளவிலான எடை,

றிய இடத்தில் வைத்து பயன்படுத்தும் வகையில் வடிவமைப்பு ,

றைந்த விலை இது ஒரு பக்கம் இருக்க .....மேலும் பல சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா..?

துவைத்து அலசும் வசதி கொண்டது

ஆறு கிலோ வரை துணியை துவைக்க முடியும்

குறைந்த எடை, சிறிய வடிவமைப்பு என்பதால் சிறிய இடத்திலும் வைத்து பயன்படுத்தலாம்




ஒருவருட உத்தரவாதம் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வாஷிங் மெஷினை கோவையில் உள்ள மக்கள் அதிகளவில் விரும்பி வாங்கி செல்கின்றனர். நீங்க கவலை படாதீங்க ..வெளி ஊர்களில் இருக்கும் மக்களும் வங்கி கணக்கில் பணம் செலுத்தி விலாசத்தை தெரிவித்தால் நேரடியாக கொரியர் சேவை மூலம் அந்தந்த மாவட்டத்திற்கு அனுப்பப்படும் என தெரிவித்து உள்ளார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா