Skip to main content

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் டிஏ உயர்வு -தமிழக அரசு ஊழியர்களுக்கு எப்போது ?


மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி(டிஏ)

உயர்த்தப்பட்டதுபோல தங்களுக்கும் உயர்த்தப்படுமா

 என தமிழகஅரசுஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
 மத்திய, மாநிலஅரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்துடன்,
அகவிலைப்படியும்சேர்த்துவழங்கப்படுகிறது.

 இந்தஅகவிலைப்படி ஒவ்வொரு 6 மாதங்களுக்கு
 ஒருமுறைஉயர்த்தப்படுவது வழக்கம். ஜனவரி,
ஜூலை ஆகியமாதங்களில்அகவிலைப்படி உயர்வு
 அமல்படுத்தப்பட்டு வருகிறது.

 மத்தியஅரசு அகவிலைப்படியை உயர்த்திய 
உடன் மாநிலஅரசுஊழியர்களுக்கு அந்தந்த
 மாநில அரசுகள் அகவிலைப்படியைஉயர்த்தி
 அறிவிக்கும்.இதனால் தங்களுக்கு எப்போது 
அகவிலைப்படிஉயர்த்தப்படும் என மாநில 
அரசு ஊழியர்கள் மத்தியில் எதிர்பார்ப்புஉருவாகியுள்ளது.
  தற்போது மத்திய அரசு ஊழியர்களான நமது
 மாநிலத்தில்பணிபுரியும் IAS,IPS ,IFS  அலுவலர்களின் DA வை 2% உயர்த்தி 
தமிழகஅரசு ஆணை பிறப்பித்துள்ளது .
இந்தமாத ஊதியத்துடன்அகவிலைப்படி 
உயர்த்தி வழங்கப்படுமா எனஅரசு ஊழியர்கள்
எதிர்பார்க்கின்றனர்.எனவே தமிழகத்திலும் 2 சதவீதம்
அகவிலைப்படியை உயர்த்தி இந்த மாத ஊதியத்துடன்
வழங்கவும்,அகவிலைப்படி நிலுவைத்தொகையை
 சேர்த்துவழங்கவும் தமிழகமுதல்வர் நடவடிக்கை 
எடுக்க வேண்டும் என்றுஅரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள்
 எதிர்பார்க்கின்றனர்.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்