Skip to main content

பல்வேறு துறைகளில் 1136 காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: தேர்வாணையம் அறிவிப்பு


*பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1136 பணியிடங்களை நிரப்ப பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.




*மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகள் ஆகியவற்றில் 1136 காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளது. 130 பிரிவுகளைச் சேர்ந்த இந்தப் பணியிடங்கள் கணினி அடிப்படையிலான தேர்வு (சி, பி, ஈ) அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.


*இந்த தேர்வு குறித்த தகுதி விவரம் மற்றும் இதர நிபந்தனைகள், விண்ணப்பப்படிவம் ஆகியன ஆணையத்தின் www.ssc.nic.in என்ற வலைதளத்திலும் தெற்கு மண்டல அலுவலகத்தின் www.sscsr.gov.in என்ற வலைதளத்திலும் கிடைக்கும்.



*இதில் தென்மண்டலத்திற்கு மட்டும் 13 வகை பணியிடங்களில் 55 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த காலிப்பணியிடங்களில் 8 பட்டதாரி நிலையிலும், 4 மேல்நிலை வகுப்பு நிலையிலும், 1 மெட்ரிக் நிலையிலும் இருக்கும்.


*விண்ணப்பதாரர்களில் பெண்கள், ஷெட்யூல்டு வகுப்பு, பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.


*தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் ஆணையத்தின் www.ssconline.nic.in என்ற வலைதளத்தில் செப்டம்பர் 30ம் தேதி மாலை 5 மணிவரை விண்ணப்பிக்கலாம். இந்தப் பதிவுகளுக்கான தேர்வுகள் அக்டோபர் 27, 29, 30 தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா