Skip to main content

Today Rasipalan 19.8.2018

மேஷம் குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள்
வந்துப் போகும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவு
ம். மாலை 4.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அதிகம் உழைக்க வேண்டும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு

ரிஷபம் குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் முக்கியத்துவம் தருவார்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்  

மிதுனம் புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க் 


கடகம் பழைய உறவுகளை புதுப்பீப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்

 கன்னி குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்


சிம்மம் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பிறக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை  

துலாம் மாலை 4.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். சிலர் உங்களை குறைக் கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் நீங்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு 

விருச்சிகம் குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். மாலை 4.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எச்சரிக்கை தேவைப்படும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்  

தனுசு குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா 

மகரம் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். சகோதரங்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்  


கும்பம் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள் 

மீனம் மாலை 4.30 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்கள் அறியாமலேயே ஒருவித படபடப்பு வந்துச் செல்லும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன் 

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன