Skip to main content

இந்தியாவுக்கு STA-1 நாடு என்ற அந்தஸ்தை வழங்கியது அமெரிக்கா

அமெரிக்காவின் அதிநவீன தொழில்நுட்ப தயாரிப்புகளை எளிதில் கொள்முதல் செய்யும் சிறப்பு அந்தஸ்து இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
கடந்த 2016 ம் ஆண்டில் அமெரிக்க பாதுகாப்பு துறையின்
முக்கிய கூட்டாளி என்ற அங்கீகாரத்தை இந்தியா பெற்றது. இதன் தொடர்ச்சியாக எஸ்.டி.ஏ-1 எனப்படும் உத்தியியல் சார்ந்த வர்த்தக அங்கீகாரம் பெற்ற நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. எஸ்.டி.ஏ-1 அங்கீகாரம் பெற்றதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒப்புதல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பானது, அமெரிக்காவின் மேம்பட்ட மற்றும் முக்கியமான நவீன தொழில்நுட்ப தயாரிப்புகளை அந்நாட்டிடம் இருந்து எளிதில் கொள்முதல் செய்ய வழிவகை செய்கிறது. இந்த அறிவிப்பானது இந்திய பாதுகாப்புத்துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். எஸ்.டி.ஏ-1 அங்கீகாரம் பெற்ற நாடுகள் பட்டியலில் உள்ள ஒரே தெற்காசிய நாடு இந்தியா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்