Skip to main content

Credit Card மோசடிகளில் இருந்து தப்பிக்கும் வழிகள்!

தற்போது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும், அவர்கள் அதைப் பயன்படுத்தும் அளவும் அதிகரித்து வருகின்றன.

கிரெடிட், டெபிட் கார்டுகளில் மோசடிக்காரர்கள் செய்யும் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. அவை குறித்த செய்திகளையும் நம்மால் அடிக்கடி அறிய முடிகிறது.
சரி, நாங்கள் எப்படி இப்படிப்பட்ட மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது என்று கேட்கிறீர்களா?
அதற்கான ஆலோசனைகள் இதோ...
சுய வரையறையை நிர்ணயித்துக் கொள்வது
ஒவ்வொரு கிரெடிட் கார்டிலும் எவ்வளவு செலவழிக்கலாம் என்று ஒரு வரையறை (கிரெடிட் லிமிட்) இருக்கும். அது தவிர, நாமாக ஒரு வரையறையை நிர்ணயித்துக் கொள்ளலாம். இவ்வாறு நிர்ணயித்துக்கொள்வதால் இரு நன்மைகள்.

முதலாவதாக, அதிகம் செலவு செய்யும் எண்ணத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளலாம். இரண்டாவதாக, கிரெடிட் கார்டு மோசடிகளின்போது நீங்கள் ஓரளவு தப்பித்துக்கொள்ளலாம்.
நீங்கள் சொந்தமாக ஒரு கிரெடிட் லிமிட்டை நிர்ணயித்து, அது குறித்து கார்டு நிறுவனத்திடம் தெரிவித்துவிட்டால், கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் செலவுகள் குறிப்பிட்ட வரையறையை நெருங்கும்போது அல்லது தாண்டும்போது கார்டு நிறுவனம் உங்களை எச்சரிக்கும்.
உங்கள் கார்டு திருடப்பட்டு பயன் படுத்தப்பட்டாலும், அந்த வரையறையைத் தாண்டி செலவு செய்ய முடியாது.
உங்களின் தனிப்பட்ட கிரெடிட் லிமிட்டை பல்வேறு சூழல்களுக்கு ஏற்ப வெவ்வேறு விதமாக அமைத்துக்கொள்ளலாம். உதாரணத்துக்கு, வெளிநாட்டில் பயன்படுத்துவது, ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய பயன்படுத்துவது, உணவகங்களில் உணவு உண்ண உபயோகிப்பது இப்படி. ‘ஆட்-ஆன்’ கார்டுகள் எனப்படும் கூடுதல் கார்டுகளிலும் இதுபோல ‘சப் லிமிட்’டை பிரதான கார்டுதாரர் ஏற்படுத்திக்கொள்ளலாம்.
வலுவான ‘பாஸ்வேர்டு’

புதிய ‘டிஜிட்டல் இந்தியா’ உந்துதலால், தற்போது ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை எகிறியிருக்கிறது. ரிசர்வ் வங்கி தெரிவிக்கும் ஒரு புள்ளிவிவரத்தின்படி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் நம் நாட்டில் நூறு கோடிக்கும் மேற்பட்ட ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடைபெற்றிருக்கின்றன. இந்தக் கணக்கில், நாம் செய்திருக்கும் பரிவர்த்தனைகளும் அடங்கும் என்பதால், நாம் எப்போதும் வலுவான பாஸ்வேர்டை பயன்படுத்துவது நல்லது. நமது பாஸ்வேர்டு, எழுத்துகள், எண்கள் மற்றும் சிறப்புக் குறியீடுகள் கொண்டதாய், எளிதில் ஊகிக்க முடியாததாய் இருக்க வேண்டும்.
வெவ்வேறு கணக்குகளுக்கு வெவ்வேறு பாஸ்வேர்டுகளை உபயோகிப்பதும், குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை மாற்றுவதும் அவசியம். ஆன்லைன் என்றாலும், ஆப்லைன் என்றாலும், பரிவர்த்தனையின்போது நாம் பாதுகாப்பான சூழலில் இருக்கிறோமா என உறுதி செய்துகொள்ள வேண்டும். எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும், பிறரிடம் நமது பாஸ்வேர்டை பகிர்ந்துகொள்ளக் கூடாது

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன