Skip to main content

சித்தா மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம்

சித்தா மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், அடுத்த வாரம் முதல், அரசு சித்தா மருத்துவ கல்லுாரிகளில் வினியோகிக்கப்படும்
சித்தா மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், அடுத்த வாரம் முதல், அரசு சித்தா மருத்துவ கல்லுாரிகளில் வினியோகிக்கப்படும்'என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில், ஆறு அரசு சித்தா மருத்துவ கல்லுாரிகளில், 390 இடங்கள் உள்ளன. அதேபோல, தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 1,350 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளுக்கான கவுன்சிலிங், 'நீட்' நுழைவுத் தேர்வுஅடிப்படையில் நடைபெறுவதாக இருந்தது. பின், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.கடந்த, 2017ல் மாணவர் சேர்க்கைக்கு ஆக., 2ல், விண்ணப்பம் வினியோகம் துவங்கியது. நடப்பாண்டில், இதுவரை, விண்ணப்பம் வினியோகிக்கப்படவில்லை. சித்தா மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங், பிளஸ் 2 அடிப்படையில் நடைபெறுவதால், 'அலோபதி' மருத்துவ படிப்பில், இடம் கிடைக்காத மாணவர்கள், சித்தா படிப்பிற்கு விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. எனவே, விண்ணப்பம் வினியோகம், எப்போது துவங்கும் என, மாணவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் கூறுகையில், 'சித்தா மருத்துவ படிப்புகளுக்கான, தகவல்குறிப்பேடு மற்றும் விண்ணப்பம் வினியோகம் அச்சிடும் பணிகள் முடிந்துள்ளன. அடுத்த வாரம் துவக்கத்தில், சித்தா மருத்துவ கல்லுாரிகளில், விண்ணப்பம் வினியோகம் துவங்கும்' என்றனர்.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்