Skip to main content

வரலட்சுமியே வருக! சுப வாழ்வு தருக!! இன்று வரலட்சுமி விரதம்

வரலட்சுமி தாயே! நாராயணரின் திருமார்பில் உறைபவளே! ஸ்ரீபீடத்தில் அருள்பவளே! செந்தாமரை மலரில் வீற்றிருப்பவளே! மதுர வல்லித்தாயே!

உன் திருவடியைப் போற்றும் எங்களுக்கு மங்கள
வாழ்வு தந்தருள்வாயாக.*பிருகு முனிவரின் மகளாக அவதரித்த பார்கவியே! குலமாதர் போற்றும் குலக் கொடியே! ஸ்ரீதரனின் துணைவியே! நல்லோரின் மனதில் குடியிருப்பவளே! குபேரனுக்கு வாழ்வு தருபவளே! சுபவாழ்வு தரும் உமது தாமரைத் திருவடிகளைச் சரணடைகிறோம்.*அமுதம் நிறைந்த பொற்கலசம் தாங்கியவளே! அருளாளர்களின் உள்ளத் தாமரையை இருப்பிட மாக கொண்டவளே! அலங்கார நாயகியே! உன் கடைக்கண் பார்வை எங்கள் இல்லத்தில் என்றும் நிலைக்கட்டும். *பூங்கொடி போன்றவளே! இளமயிலே! அலமேலு மங்கைத்தாயாரே! தேவரும், மூவரும் போற்றும் முதல்வியே! ஜகன்மாதாவே! பாற்கடலில் உதித்த அலைமகளே! அஷ்ட ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்குவாயாக.முதலும் முடிவும் இல்லாதவளே!
ஆதிலட்சுமியே! தஞ்சமென வந்தவரை தாங்கும் தயாபரியே! மகாவிஷ்ணுவின் இதயத்தில் உறைபவளே! நிலவு போல குளிர்ந்த பார்வையால் எங்கள் மீது அருள்மழை பொழிவாயாக.நவரத்தின ஆபரணங்களை விரும்பி அணிபவளே! செவ்வானம் போல சிவந்த நிறம் கொண்டவளே! குறையில்லாத வாழ்வருளும் கோமளவல்லியே! செங்கமல வல்லியே! பெருந் தேவித் தாயாரே! அபயக்கரம் நீட்டி எங்களை ஆதரிக்க வேண்டும்.*மங்கள ரூபிணியே! பசுவின் அம்சம் கொண்டவளே! வேண்டிய வரம் தரும் கற்பகமே! சிவந்த தாமரை மலரை இருப்பிடமாக உடையவளே! உன் அருளால் இந்த உலகம் செழிக்கட்டும். உயிர்கள் எல்லாம் இன்புற்று வாழட்டும்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா