Skip to main content

போக்சோ சட்டம் குறித்து பயிற்சி

பள்ளிகளில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுப்பது, பெண் குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பு அளிப்பது தொடர்பான போக்சோ சட்டம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் மற்றும்
தலைமை ஆசிரியர்களுக்கு சென்னையில் நேற்று பயிற்சி தொடங்கியது.சமீப காலமாக பள்ளிகளில் பாலியல் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குற்றங்களை தடுப்பது குறித்தும் போக்சோ சட்டம் குறித்தும் 32 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், 32 மாதிரி மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டம் சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேனிலைப் பள்ளியில் நேற்று தொடங்கியது. இதில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், சமூக பாதுகாப்பு துறை அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து சமூக பாதுகாப்பு துறையின் இணை இயக்குநர் தனசேகர பாண்டியன் கூறியதாவது: கல்வித்துறை சார்ந்த அலுவலர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து தடுப்பது தொடர்பான சட்டம் எனப்படும் போக்சோ 2012 சட்டம் குறித்து பயிற்சி அளிப்பது, அனைத்து கல்வி நிறுவனங்களை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மேற்கண்ட பயிற்சி கொடுத்து போக்சோ சட்டத்தின் முக்கிய ஷரத்துக்களை மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தவும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க இந்த மாதிரியான பயிற்சி அளிக்கப்படுகிறது.

நீதித்துறையின் ஜஸ்டிஸ் கமிட்டியின் அறிவுரையின் பேரிலும் அரசின் முயற்சியாலும், பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுகிறது. முதற்கட்டமாக, குழந்தைகளின் நடத்தையை வைத்தே கண்டறிதல் வேண்டும். பாதுகாப்பு வளையத்தில் இருந்து எந்த குழந்தையும் வெளியில் வந்துவிடக் கூடாது என்று கவனமாக செயல்பட இந்த பயிற்சி உதவியாக இருக்கிறது. குழந்தைகளிடம் தெரியும் மாற்றம், பெற்றோரிடம் பேசி தீர்வு காண்பது, தனித்து உள்ள குழந்தைகளிடம் உள்ள குறைகளை கண்டறிதல் ஆகியவை ஆசிரியர்களால்தான் முடியும். அதனால் அனைத்து பயிற்சியும் ஆசிரியர்களுக்கும் அளிக்கப்படுகிறது. போக்சோ என்ற வார்த்தை மக்கள் மத்தியில் அரசு வெளியில் கொண்டு வந்த விழிப்புணர்வால்தான் இது தெரியவந்தது. எல்லாம் ஒன்று திரண்டு இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான மனநிலை எல்லோருக்கும் வர வேண்டும் என்பதே இதன் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு