Skip to main content

6ம் வகுப்பு முதல் யோகா என்.சி.இ.ஆர்.டி., பரிந்துரை

புதுடில்லி:'பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல், யோகா பயிற்சியை கட்டாயமாக்க வேண்டும்' என, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் கூறியுள்ளது.


டில்லியில், என்.சி.இ.ஆர்.டி., அதிகாரி ஒருவர் கூறியதாவது:பள்ளி பாடத்திட்டத்தில், உடற்கல்வி, விளையாட்டு, யோகா ஆகியவை கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என, என்.சி.இ. ஆர்.டி., தெரிவித்துள்ளது.ஆறாம் வகுப்பிலிருந்து மாணவ - மாணவியருக்கு, யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது; யோகா பயிற்சியுடன், அதன் பயன்களையும், மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.

இது தொடர்பாக, சி.பி.எஸ்.இ., மாநில, யூனியன் பிரதேசங்களின், பள்ளி கல்வித்துறைகளுக்கு பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன.இந்த பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும் என, மாநில அரசின் பள்ளி கல்வித்துறையை கட்டாயப்படுத்த முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்