Skip to main content

ஜியோ போன் 2 எவ்வாறு வாங்குவது?

தொலைத்தொடர்பு நிறுவனங்களில் அதிவேக வளர்ச்சியை ஜியோ பெற்றுள்ளது. இது ஜியோ போன் 2 என்ற பெயரில் பட்ஜெட் போன் ஒன்றை விற்பனைக்கு கொண்டு வருகிறது. இன்று நண்பகல் 12 மணிக்கு பிளாஷ் சேல் முறையில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு வரவுள்ளதால், விரைவாக முன்பதிவு
செய்ய வேண்டியுள்ளது.
இதில் குவர்டி(QWERTY) கீ போர்டு, கை ஓஎஸ் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. முந்தைய ஜியோ போனை விட, புதிய ஜியோ போன் 2 இருமடங்கு விலை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஜியோ போன் 2 பிளாஷ் சேலில் முன்பதிவு செய்வோர், அடுத்த 5 - 7 நாட்களில் போனைப் பெறலாம். மேலும் அருகிலுள்ள ஜியோ போன் டீலர்கள் மூலமும் வாங்கலாம்.
இந்தியாவில் ஜியோ போன் 2 விலை:
ஜியோ போன் 2வின் விலை ரூ.2,999 ஆகும். முதல் போன் விற்பனையில் கூறப்பட்டது போல், தற்போது பணத்தை திரும்ப பெறும் வசதி இதில் இல்லை. இதனை jio.com என்ற இணையதளம் மூலம் வாங்கலாம்.
ஜியோ போன் 2 வாங்க விரும்புபவர்கள், இன்று நண்பகல் 12 மணிக்கு ஒரு சில நிமிடங்கள் முன்பாக இணையதளத்தை திறந்து, அதனை ரீ-பெரஷ் செய்து கொண்டிருக்கவும். ஜியோ போன் 2க்கான ரீ-சார்ஜ் பேக்குகள் ரூ.49, ரூ.99, ரூ.153 என அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஜியோ போன் 2 சிறப்பம்சங்கள், வசதிகள்:
இரண்டு நானோ சிம்கள் போடும் வகையில், கை ஓஎஸ் இயங்குதளத்தில் செயல்படுகிறது. இதில் 2.4 இஞ்ச் QVGA டிஸ்பிளே, 512 எம்பி ரேம், 4 ஜிபி உள்ளடக்க மெமரி, மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி உள்ளது. இந்த போனில் 2 மெகா பிக்சல் பின்பக்க கேமரா, விஜிஏ செல்பி கேமரா இடம்பெற்றுள்ளது.

இதன்மூலம் 4ஜி வோல்ட், வோ வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், என்.எஃப்.சி, எஃப். எம் ரேடியோவை இணைத்துக் கொள்ளலாம். கூகுள் அசிஸ்டெண்ட் செயல்படுத்த பிரத்யேக வாய்ஸ் கமெண்ட் பட்டன் காணப்படுகிறது. இந்தப் போன் 2000 mAh பேட்டரி வசதி உள்ளது.
பிளாக்பெர்ரி போனைப் போல, 4 பக்க திருப்புதல் வசதி இதில் இடம்பெற்றுள்ளது. முதல் ஜியோ போனை விட, வடிவமைப்பில் பெரிய மாற்றம் கண்டுள்ளது. டிஸ்பிளே மிகப்பெரிதாக இருக்கிறது. 

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்