Skip to main content

உலக வரலாற்றில் இன்று 27.08.2018

ஆகஸ்டு 27 (August 27) கிரிகோரியன் ஆண்டின் 239 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 240 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 126 நாட்கள் உள்ளன.


நிகழ்வுகள்

1689 – இரசியாவுக்கும் சீனாவின் சிங் பேரரசுக்கும் இடையில் நெர்ச்சின்ஸ்க் உடன்பாடு எட்டப்பட்டது.
1776 – பிரித்தானியப் படைகள் லோங் தீவில் ஜோர்ஜ் வாஷிங்டன் தலைமையிலான அமெரிக்கப் படைகளைத் தோற்கடித்தன.
1813 – ஆஸ்திரியா, ரஷ்யா, மற்றும் புரூசியா படைகளை நெப்போலியன் “டிறெஸ்டென்” என்ற இடத்தில் தோற்கடித்தான்.
1816 – அல்ஜியேர்ஸ் மீது பிரித்தானியா குண்டுத் தாக்குதலை மேற்கொண்டது.
1828 – ரஷ்யப் படை “அக்கால்சிக்” என்ற இடத்தில் துருக்கியப் படைகளை வென்றது.
1828 – பிரேசிலுக்கும் ஆர்ஜெண்டீனாவுக்கும் இடையில் இடம்பெற்ற சமரசப் பேச்சுக்களில் உருகுவாய் தனிநாடாக அறிவிக்கப்பட்டது.
1859 – பென்சில்வேனியாவின் “டிட்டுஸ்வில்” என்ற இடத்தில் பெற்றோலியம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே உலகில் வெற்றிகரமாகத் தோண்டப்பட்ட முதலாவது எண்ணெய்க் கிணறு ஆகும்.
1881 – புளோரிடாவில் இடம்பெற்ற சூறாவளியினால் 700 பேர் வரையில் இறந்தனர்.
1883 – இந்தோனீசியாவில் கிரகட்டோவா எரிமலைத் தீவு வெடித்ததினால் உருவாகிய ஆழிப்பேரலையினால் ஜாவா, சுமாத்திரா தீவுகளில் பல இடங்கள் அழிந்தன. கிட்டத்தட்ட 36,000 பேர் கொல்லப்பட்டனர்.
1893 – ஐக்கிய அமெரிக்காவில் கடல் தீவுகளில் இடம்பெற்ற சூறாவளியில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
1896 – ஆங்கிலோ-சன்சிபார் போர்: ஐக்கிய இராச்சியத்துக்கும் சன்சிபாருக்கும் இடையில் இடம்பெற்ற போர் உலகின் மிககுறைந்த நேரத்தில் (09:02 – 09:40) நிகழ்ந்து முடிந்த போராகும்.
1916 – முதலாம் உலகப் போர்: ருமேனியா ஆஸ்திரியா-ஹங்கேரியுடன் போரை அறிவித்தது. இது பின்னர் ஜெர்மனி, பல்கேரியப் படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டது.

1921 – 1916 இல் ஓட்டோமான் பேரரசுடன் போரிட்ட செரீப் உசைன் பின் அலி என்பவரின் மகனை பிரித்தானியர் ஈராக்கின் மன்னனாக ஈராக்கின் முதலாம் பைசல் என்ற பெயரில் அறிவித்தனர்.
1928 – போருக்கெதிராக கெலொக்-பிறையண்ட் உடன்பாட்டில் 60 நாடுகள் கைச்சாத்திட்டன.
1939 – உலகின் முதலாவது ஜெட் விமானம் Heinkel He 178 சேவைக்கு விடப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் நியூ ஜோர்ஜியா தீவை விட்டு விலகினர்.
1952 – லக்சம்பேர்க்கில் மேற்கு ஜெர்மனிக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் போர் நட்டஈடு தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி ஜெர்மனி 3 பில்லியன் டொச்சு மார்க்கை நட்டஈடாகச் செலுத்த ஒப்புக் கொண்டது.
1957 – மலேசியாவின் அரசியலமைப்பு சாசனம் அமுலானது.
1962 – நாசா மரைனர் 2 விண்கலத்தை வீனஸ் நோக்கி செலுத்தியது.
1975 – போர்த்துக்கீசத் திமோரின் ஆளுநர் அதனாட்சியை கிளர்ச்சியாளர்களிடம் கைவிட்டு தலைநகர் திலியை விட்டு அட்டாவுரோ தீவுக்குத் தப்பி ஓடினார்.
1979 – அயர்லாந்தில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த மவுண்ட்பேட்டன் பிரபுவும் மற்றும் மூவரும் ஐஆர்ஏயின் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர். மேலுமொரு குண்டுவெடிப்பில் 18 பிரித்தானியப் படையினர் கொல்லப்பட்டனர்.
1982 – துருக்கிய இராணுவ உயர் அதிகாரி அடில்லா அட்லிகாட் என்பவர் கனடாவின் ஒட்டாவாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1915ம் ஆண்டில் 1.5 மில்லியன் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்கவென இத்தாக்குதலை நடத்தியதாக ஆர்மீனிய தீவிரவாதக் குழு இதற்கு உரிமை கோரியது.
1985 – நைஜீரியாவில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் அந்நாட்டு அரசு கவிழ்க்கப்பட்டது.
1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து மால்டோவா பிரிந்தது.
2000 – மொஸ்கோவின் ஒஸ்டான்கினோ கோபுரம் தீப்பற்றியதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
2003 – செவ்வாய்க் கோள் பூமிக்கு மிகக் கிட்டவாக 55,758,006 கிலோமீட்டர் தூரத்துக்கு 60,000 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தது.
2006 – அமெரிக்காவின் கென்டக்கியில் புளூகிராஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில் தரையில் வீழ்ந்து நொருங்கியதில் 50 பேரில் 49 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் நவாப் அக்பர் பக்டி இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

பிறப்புக்கள்

1770 – ஹெகல், ஜெர்மன் மெய்யியல் அறிஞர் (இ. 1831)
1876 – தேசிக விநாயகம்பிள்ளை, கவிமணி (இ. 1954)
1908 – தண்டபாணி தேசிகர், கருநாடக இசைப் பாடகர்
1908 – டொன் பிறட்மன், ஆஸ்திரேலியத் துடுப்பாளர் (இ. 2001)
1942 – வலேரி பொல்யாக்கொவ், உருசிய விண்வெளி வீரர்
1972 – தி க்ரேட் காளீ, இந்திய தொழில்முறை மல்யுத்த வீரர், நடிகர்

இறப்புகள்


1879 – ரோலண்ட் ஹில், நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தவர் (பி. 1795)
1963 – டபிள்யூ.இ.பி. டுபோய்ஸ், ஆபிரிக்க அமெரிக்க மனித உரிமையாளர் (பி. 1868)
1965 – லெ கொபூசியே, சுவிட்சர்லாந்து கட்டிடக் கலைஞர் (பி. 1887)
1975 – முதலாம் ஹைலி செலாசி, எதியோப்பிய மன்னர் (பி. 1892)
1976 – முக்கேஷ், இந்தியப் பின்னணிப் பாடகர் (பி. 1923)
1979 – மவுண்ட்பேட்டன் பிரபு, பிரித்தானிய அட்மிரல் (பி. 1900)

சிறப்பு நாள்

மால்டோவா – விடுதலை நாள் (1991)

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன