Skip to main content

School Morning Prayer Activities - 17.07.2018 (Daily Updates... )

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:


திருக்குறள்:

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

உரை:

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

பழமொழி :

A journey of a thousand miles begins with a single step

ஆயிரம் கல் தொலைவுப் பயணமும் ஒரே ஒரு எட்டில்தான் தொடங்குகிறது

பொன்மொழி:

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

- லியோ டால்ஸ்டாய்


இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது?
பேரீச்சை மரம்

2.மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முதன் முதலில் எந்த ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கியது?
1801


நீதிக்கதை :

சிங்கமும் சிறு எலியும்
(The Lion and The Mouse)



ஒரு நாள் மதிய வேளையில் சிங்கம் ஒன்று காட்டில் தூங்கிக் கொண்டு இருந்தது.

அங்கு வந்த எலி சிங்கத்தின் மீது குதித்து விளையாடியது.

இதனால் சிங்கம் விழித்தெழுந்தது கோபம் கொண்ட சிங்கம் எலியைப் பிடித்து, “நீ எனக்கு இன்று நல்ல மதிய உணவாக போகிறாய்” என்று கர்ஜித்தது.

ஆனால் எலியோ! சிங்கத்திடம், “என்னை மன்னித்து விடுங்கள் நான் தெரியாமல் உங்கள் மீது ஏறிவிட்டேன். என்னை சாப்பிடாதீர்கள்”. எனக் கெஞ்சிக் கேட்டது.

சிங்கத்திடம் “இன்று நீங்கள் என்னைக் கொல்லாமல் விட்டால் என்றாவது ஒரு நாள் உங்களுக்கு என் நன்றியைத் திருப்பிச் செலுத்துவேன்” என்றது. சிங்கமோ, “இவ்வளவு சிறிய உடம்பை வைத்துகொண்டு எனக்கு நீ உதவ போகிறாயா?” என்று எலியை ஏளனம் செய்தது. இருந்தாலும் எலியைக் கொல்லாமல் போக விட்டது.

சில நாட்களின் பின் சிறிய இறைச்சி துண்டிற்கு ஆசைப்பட்ட அந்தச் சிங்கம் வேடர்கள் வைத்திருந்த வலையில் சிக்கிகொண்டது.


வலையில் அகப்பட்ட சிங்கம் பலமாகக் கர்ஜித்து அழுதது.


அந்தச் சிறிய எலி சிங்கத்தின் சத்தத்தைக் கேட்டு அந்த இடத்திற்கு வந்து வலையைத் தன் பல்லினால் வெட்டி சிங்கத்தைத் தப்பிப் போக உதவியது.

சிங்கம் இந்தச் சின்ன எலி என்னைக் காப்பாற்றி விட்டதே என்று வெட்கப்பட்டு எலிக்கு தன்னைக் காப்பாற்றியதற்கு நன்றி சொல்லிச் சென்றது.

நீதி: உருவத்தை யாரையும் பார்த்து ஏளனம் செய்யக் கூடாது.


இன்றைய செய்தி துளிகள் : 

1.சித்தா, ஆயுர்வேதா மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு தேவையில்லை : முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை


2.தமிழில் நீட் தேர்வெழுதியோருக்கு கருணை மதிப்பெண் வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு

3.பி.எட் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது


4.ஒகேனக்கல்லில் அருவியை மூழ்கடித்த வெள்ளம்: வினாடிக்கு 1 லட்சம் கன அடி நீர்வரத்து

5.இலங்கை கேப்டனுக்கு 2 டெஸ்ட், 4 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதித்து ஐசிசி நடவடிக்கை

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா