Skip to main content

உங்கள் போனை கட்டளையிட்டால் போதும், Google Duo Latest Update!

கூகுள் டூயோ புதிய அப்டேட்டின் ஒரு பகுதியாக கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் டேப்லெட் சென்டிரி இடைமுகம்(Tablet Centric Interface) அறிமுகம் செய்யப்படுகிறது. கூகுள் டூயோ, பிரபலமான அழைப்புப் பயன்பாடு செயலி இப்போது புதிய புதுப்பிப்பைப் பெற்றுள்ளது, இதை
பயனர்கள் கூகுள் அசிஸ்டன்ட் மூலம் அழைப்புகளை அழைக்க அனுமதிக்கிறது.



இப்போது கூகுள் அசிஸ்டன்ட் பயனர்கள், தொடர்பு மற்றும் அழைப்புக்கான குரல் கட்டளையைப் மட்டும் கூறினால் போதும். நீங்கள் கூகுள் அசிஸ்டன்ட் பயனாளர் என்றால், உங்கள் கூகுள் டூயோ செயலி மூலம் அழைப்பு செய்ய கால்(Video call) என்று சொல்லி உங்கள் நண்பர் பெயரை மட்டும் சொன்னால் போதும். கூகுள் டூயோ உங்கள் நண்பருடன் அழைப்பை உடனடியாக தொடங்கி விடும்.

உங்கள் நண்பர் கூகுள் டூயோ பயனாளர் இல்லாவிடின், அவர்களுக்கு ஹாங்கவுட்ஸ்(Hangouts) வழியாக தொடர்பு மற்றும் அழைப்புகளை இணைக்கின்றது இந்த புதிய அப்டேட்.
புதிய கூகுள் டூயோ அப்டேட் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு கிடைக்குமென்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. கூடுதலாக கூகுள் டூயோ ஒரே நேரத்தில் உங்களின் பல சாதனங்களில் எடுக்கும் விதம் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
புதிய மேம்படுத்தலில் டப்ளேட் பயனாளர்களுக்காகவே புதிய வடிவமைப்பை கூகுள் டூயோ அப்டேட் செய்துள்ளது. டேப்லெட் சென்டிரி இடைமுகம்(Tablet Centric Interface) விரிவான திரையுடன் கூடிய கால் வசதியை முழு திரைக்கும் எடுத்துச் செல்கிறது. இந்த புதிய கூகுள் டூயோ அப்டேட் பயனாளர்களின் பயன்பாட்டு அனுபவத்தை சிறப்பாகியுள்ளது.

கூகுள் டூயோ பயன்பாட்டை மிக உயர்ந்த தரம் வாய்ந்த அழைப்பு செயலியாக விளம்பரப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன