Skip to main content

ஆசிரியர் பணியிடங்களில் இடஒதுக்கீடுக்கு மத்திய அரசு உறுதி

பல்கலை ஆசிரியர் பணியிடங்களில், இட ஒதுக்கீடு செய்ய, மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது' என, மத்திய மனிதவள மேம்பாட்டு
த்துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்,.ராஜ்யசபாவில், இது பற்றி அவர் கூறியதாவது:
பல்கலை மற்றும் கல்லுாரிகளில், ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக, அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஏற்புடையதல்ல.
 இந்த உத்தரவை எதிர்த்து, சிறப்பு மனுக்களை, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். அது, ஆகஸ்ட், ௧௩ல், விசாரணைக்கு வருகிறது.

இதனால், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், பல்கலைக்கழகம் மற்றும் கல்லுாரி களில், ஆசிரியர் பணிகளுக்கான, அனைத்து நேர்காணல்களையும், நிறுத்தி வைத்துள்ளது.பல்கலை மற்றும் கல்லுாரி ஆசிரியர் நியமனங்களில், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான, சரியான ஒதுக்கீட்டை பேணிக்காக்க முடியும் என்ற நம்பிக்கை, எங்களுக்கு இருக்கிறது.அதை இழக்கவோ, மற்றவர்கள் அதைக் கலைக்கவோ அனுமதிக்கமாட்டோம்.இவ்வாறு பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்