Skip to main content

மேற்குவங்கத்தின் பெயர் இனி ‘பங்களா’ - சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

மேற்குவங்க மாநிலத்தின் பெயரை‘பங்களா’ என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு
மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு அதிகாரபூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்படும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வங்காளம் இரண்டாக பிரிக்கப்பட்டது. நாடு சுதந்திரத்திற்கு பின் மேற்குவங்கம் இந்தியாவுடனும், கிழக்கு வங்கம் பாகிஸ்தானுடனும் இணைக்கப்பட்டன. கிழக்கு வங்கம் பின்னர் தனிநாடாக பங்களாதேஷ் என மாறியது. இந்நிலையில் வங்காளத்தின் பாரம்பரியதை மீட்டெடுக்கும் விதமாக மேற்குவங்கத்தின் பெயரை மாற்ற அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி முடிவு செய்தார்.


மேலும் மேற்குவங்கத்தின் ஆங்கில மொழியாக்கம் ‘வெஸ்ட் பெங்கால்’ என்பதால் மாநிலங்களின் பட்டியலில் இது கடைசி இடத்திற்கு வந்து விடுகிறது. எனவே இதை மாற்றும் விதமாக 2011-ம் ஆண்டே மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தின் பெயரை வங்காள மொழியில் ‘பச்சிம் பங்கா’ என பெயர் மாற்றம் செய்தார். ஆனால் இதை மத்திய அரசு ஏற்கவில்லை. இதன் பிறகு வங்காளத்தில் ‘பங்களா’ என்றும் ஆங்கிலத்தில் ‘பெங்கால்’ என்றும், இந்தியில் ‘பங்கால்’ என்று அழைக்கும் பரிந்துரையை அம்மாநில அரசு அனுப்பி வைத்தது. ஆனால் இதனையும் மத்திய அஅரசு ஏற்கவில்லை. இந்நிலையில் மேற்குவங்கத்தின் பெயரை மீண்டும் ‘பங்களா’ என பெயர் மாற்றம் செய்ய அம்மாநில அரசு முடிவு செய்தது. இதன்படி வங்க மொழியில் மட்டுமின்றி, இந்தி, ஆங்கிலம் என அனைத்து மொழிகளிலும் ‘பங்களா’ என்றே அழைக்கும் விதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். மத்திய அரசு ஒப்புதல் அளித்தபின் அது அரசிதழில் வெளியாகும். அதன்பிறகு மேற்கு வங்கத்தின் பெயர் அதிகாரபூர்வமாக ‘பங்களா’ என பெயர் மாற்றம் செய்யப்படும்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா